நடிகர் அர்ஜுன் மீது மேலும் 4 பெண்கள் புகார்..!பரபரப்பை ஏற்படுத்திய நடிகை..!

0
257

தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுன் ஒரு பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர். 90’ஸ் கால கட்டம் தொடங்கி இன்று வரை உள்ள சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பரிட்சயமான ஒரு நடிகராக இருந்து வருகிறார்.

Shruthihariharan

இப்படிபட்ட அந்தஸ்தில் உள்ள நடிகர் அர்ஜுன் மீது அவருடன் “நிபுணன்” படத்தில் இணைந்து நடித்த ஸ்ருதி ஹரிஹரன் என்ற நடிகை பாலியல் புகார் அளித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

நிபுணன் படத்தின் போது நடிகர் அர்ஜுன் நெருக்கமான காட்சிகளை இயக்குனரிடம் வேண்டும் என்றே கேட்டு வாங்கினார் என்றும் அந்த காட்சியில் வேணுமென்றே பின் பாகத்தை தடவினார் என்றும் நடிகை ஸ்ருதி நாராயணன் குற்றம் சாட்டி இருந்தார்.ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்த நடிகர் அர்ஜுன், நடிகை ஸ்ருதி மீது சட்ட ரீதியாக வழக்கு தொடரப்போவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இந்நிலையில் ஸ்ருதி பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, நான் மட்டும் இல்லை இன்னும் 4 பெண்கள் அர்ஜுன் மீது புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்களின் பெயர்களை தெரிவிக்க விரும்பவில்லை. அர்ஜுனுக்கு எதிராக ஆதாரமும் உள்ளது. தற்போது சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறோம். எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டதும் அதை மீடியாவிடம் காண்பிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.