10 நாட்களுக்கு முன் லண்டனில் இருந்து திரும்பிய ஸ்ருதி ஹாசன் என்ன செய்து கொண்டுள்ளார்.

0
36411
sruthi
- Advertisement -

உலகம் முழுவதும் யுத்தத்தை விட பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கும் ஒரே ஒரு விஷயம் இந்த கொரோனா வைரஸ். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தொடங்கிய இந்த கொரோனா தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. இதனால் லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள். இந்த கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கொரோனாவினால் அதிகம் பாதிப்படைந்தது இத்தாலி நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நோய்த்தொற்று உள்ளவர்களும், வெளிநாடு சென்று வந்தவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்கள், நெட்டிசன்கள், ரசிகர்கள் என அனைவரும் கொரோனா வைரஸ் குறித்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

இதையும் பாருங்க : பிறந்தநாளில் கணவருடன் இருக்கும் நீச்சல் உடை புகைப்படம். பூஜாவின் புகைப்படங்கள்.

அந்த வகையில் நடிகை சுருதிஹாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்து உள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக விளக்கிக் கொண்டிருக்கும் கமலஹாசனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் பத்து நாட்களுக்கு முன்பாகத் தான் லண்டன் சென்று தற்போது இந்தியா திரும்பி உள்ளார்.

-விளம்பரம்-

இந்த கரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார் ஸ்ருதிஹாசன். அதே போல் அவரது தாயார் சரிகா மும்பையில் உள்ள வீட்டிலும், தந்தை கமலஹாசன், சகோதரி அக்ஷர ஹாசன் ஆகியோர் சென்னையில் தனி தனி வீட்டிலும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவித்து உள்ளார். அனைவரும் தாங்கள் மேற்கொண்ட பயணங்களின் அடிப்படையில் தான் இந்த முடிவு எடுத்திருப்பதாக சுருதி ஹாசன் தெரிவித்து உள்ளார்.

இந்த முடிவு கடினமாக இருந்தாலும் மக்கள் இதை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். தன்னுடன் உதவியாளர்கள் யாரும் இல்லை என்றும், தான் வளர்க்கும் பூனை கிளாரா மட்டும் தம்முடன் இருப்பதாகவும் ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் கூட சுகாசினி –மணிரத்தினம் அவர்களின் மகன் தனிமைப் படுத்தி இருக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவை வைரலாகி இருந்தது.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதால் அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். தற்போதைக்கு இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். மேலும், தமிழகத்தில் மதுரையை சேர்ந்த ஒருவர் இந்த கொரோனா பாதிப்பால் இறந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement