கமல்ஹாசன் என்கிற அடையாளம் வேண்டாம், பெற்றோர்களின் பிடிவாதத்தால் – ஸ்ருதி ஹாசன் ஓப்பன் டாக்

0
128
- Advertisement -

பிரபல நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கமல் ஹாசன். இவருக்கு ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

-விளம்பரம்-

மேலும், சுருதிஹாசன் நடிகை மட்டுமில்லாமல் பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என பழமொழிகளில் நடித்து வருகிறார். தற்போது ஸ்ருதிஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் ‘கூலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதோடு தெலுங்கு மற்றும் இங்கிலீஷ் மொழிகளிலும் ஒரு சில படங்களில் கமிட்டாகியுள்ளார் என்று தெரிகிறது.

- Advertisement -

ஸ்ருதிஹாசன் பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் பிரபல யூடியூபரான மதன் கௌரியுடன் ஸ்ருதிஹாசன் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அதில் அவர், ‘எனது பெற்றோராக கமல்ஹாசனும், சரிகாவும் இருப்பது பெருமை தான் என்றாலும், எனது தந்தையின் புகழ் சில சமயங்களில் எனக்கு சுமையாக உணர்ந்தேன். நான் வளர்ந்து வரும் காலகட்டத்தில் கமல்ஹாசனை பற்றிய கேள்விகள் அடிக்கடி எதிர் கொண்டேன் ‌ பலரும் கமலின் மகள் இவள் என்று குறிப்பிடுவார்கள். அது ஒரு வித்தியாசமான அடையாளத்தை உருவாக்குவதாக நான் உணர்ந்தேன்.

பூஜா ராமச்சந்திரன்:

அதனால், ‘ நான் ஸ்ருதி, எனக்கு என சொந்த அடையாளம் வேண்டும்’ என்று அடிக்கடி நினைப்பேன். சிறுவயதில் அப்பா குறித்து யாராவது கேட்டால் கூட, ‘ இல்லை, என் அப்பா பெயர் டாக்டர் ராமச்சந்திரன், நான் பூஜா ராமச்சந்திரன்’ என்று சொல்லிவிடுவேன். ராமச்சந்திரன் என்பவர் எங்கள் பேமிலி டாக்டர் என்று கூறியுள்ளார். தொடர்ந்து தனது பெற்றோர்கள் பற்றி பேசிய ஸ்ருதி ஹாசன், எனது தந்தை கமல்ஹாசன் மற்றும் தாய் சரிகா மிகவும் பிடிவாதமான நபர்களாக இருந்தார்கள்.

-விளம்பரம்-

சென்னையில் இருந்து வெளியேறியதற்கு காரணம்:

அதனால் மிகவும் பாதிப்படைந்தது நானும், என்னுடைய சகோதரியும் தான். என்னுடைய பெற்றோர்கள் பிரிந்த பிறகு நான் மும்பைக்கு குடிப்பெயர்ந்தேன். அது சென்னைக்கு வெளியே வாழ்க்கையை அனுபவிக்க எனக்கு வாய்ப்பளித்தது. என்னுடைய தந்தையின் புகழ் வெளிச்சத்தில் இருந்து தப்பிப்பது முடியாத விஷயமாக இருந்தது. அதனால் சென்னையில் இருக்கவே எனக்கு பிடிக்கவில்லை. அதனால் இங்கு உள்ளவர்களை பார்ப்பது வெறுப்பாக நினைத்தேன்.

ஜோதிடம் குறித்து:

ஆனால், எனக்கு கிடைத்திருக்கும் தந்தையின் மரபு ரீதியிலான பெருமையை ஒப்புக்கொள்கிறேன். ‘கமல் இல்லாமல் ஸ்ருதியை நான் கற்பனை கூட செய்ய விரும்பவில்லை’ என்று கூறியுள்ளார். பின், நான் ஜோதிடத்தை நிறைய நம்புவேன். நான் சிம்ம ராசி. தினமும் நான் என்னுடைய ராசி பலனை படிப்பேன். முக்கியமாக ஒருவர் சொல்கிற ராசிபலன் எனக்கு ஏற்றவாறு இல்லை என்றால், வேறு ஒருவர் சொல்லும் ராசி பலனை கேட்பேன். சில விஷயங்கள் அவர்கள் சொல்வது போல் நடக்கும். ஆனால், நான் முழுமையாக அதையே நம்பி இருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Advertisement