ரஜினியின் கூலி படம் தொடர்பாக நடிகை சிம்ரன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. கடைசியாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘லியோ’ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

அதிரடி ஆக்சன் பாணியில் வெளிவந்த லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். திரை அடுத்து சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ், கன்னட நடிகர் உபேந்திரா, கன்னட நடிகை ரச்சிதா ராம், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா, மலையாள நடிகர் சௌபின் சாகிர், நாகர்ஜுனா, அமீர் கான் உட்பட பலர் நடிந்து இருந்தார்கள்.
கூலி படம்:
பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாடு மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் கூலி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகி இருக்கிறது. இதுவரை இந்த படம் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சிம்ரன் பேட்டி:
மேலும் இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலருமே பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த படம் தொடர்பாக நடிகை சிம்ரன் அளித்திருந்த பேட்டியில், நான் ரஜினி சாருடைய மிகப்பெரிய ரசிகை. கூலி படத்தை பார்த்தேன். அது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. நான் எப்போதுமே ரஜினி சார் நடித்த எல்லா படங்களையும் பார்த்து விடுவேன். மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு கூலி படம் வெற்றி படம்தான். கதை நன்றாக இருந்தால் மட்டும்தான் எல்லோருமே அதை விரும்புவார்கள் என நினைக்கிறேன்.

ரஜினி பற்றி சொன்னது:
ரஜினி சார் தன்னுடைய சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார். கதையும் எனக்கு பிடித்திருந்தது என்று கூறி இருந்தார். அதற்கு பின் ரஜினி திரைப்பயணம் தொடர்பாக சிம்ரன் போட்ட பதிவில், நடிகர் ரஜினி சார் தன்னுடைய திரை பயணத்தின் 50 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறார். வெள்ளித்திரையில் இருந்து மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களுக்கு உங்கள் மாயாஜாலம் வந்து சேர்ந்திருக்கிறது.

ரஜினி உடன் சந்திப்பு:
ஸ்டைல், ஸ்டார் என எப்படி இருந்தாலுமே எளிமையே கையாளும் மனிதர் ரஜினி சார். உங்களுடன் பணி புரிவது ஒரு பெரிய பாக்கியம். சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகை சிம்ரன் தற்போது ரஜினியை நேரில் சந்தித்து அவர் உடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். அதில் சிம்ரன், சில சந்திப்புகள் காலத்துக்கும் அப்பாற்பட்டவை. அழகான தருணத்தை பகிர்ந்ததற்காக நன்றி உள்ளவளாக இருப்பேன் என்று கூறி இருக்கிறார்.






