அக்கா, எப்படி இருந்த ஒரு காலத்துல – சிம்ரனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வருந்திய ரசிகர்கள்.

0
1708
simran
- Advertisement -

தமிழ் சினிமாவின் 90ஸ் காலகட்டத்தில் முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களான விஜய், அஜித், விக்ரம், சூர்யா என்று பல்வேறு முன்னனி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்துவிட்ட சிம்ரன், தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கொடி கட்டி பறந்து வந்தார் சிம்ரன் என்றதும் நம் நினைவில் முதலில் வருவது அவரது நடனம் தான். இதனால் சிம்ரனை பலரும் இடுப்பழகி என்று அழைத்து வந்தனர்.தமிழில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன் நடித்த பல்வேறு படங்களுக்கு இவரது சிறப்பான நடிப்பில் இவருக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தது.

-விளம்பரம்-

சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த வில்லி கதாபாத்திரம் என்று நடிகை சிம்ரன் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். தமிழில் கமல், விஜய், அஜித், சூர்யா,சரத்குமார் என்று பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த சிம்ரன் அவரது காலகட்டத்தில் ஒரு டாப் நடிகையாகவே இருந்து வந்தார். சிம்ரன் கடந்த 2003 ஆம் ஆண்டு சதீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் என்றும் கூறப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் இவருக்கு 2 ஆண் குழந்தைகளும் பிறந்தனர்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் 3யில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களின் Get together – வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

திருமணம் முடிந்து குழந்தை குட்டி என்று செட்டில் ஆன பின்னரும் தனது நடிப்பை கைவிடாமல் இருந்து வந்தார். மேலும், தனது செகண்ட் இன்னிங்ஸ்ஸை தொடர்ந்த சிம்ரன் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்குபெற்று வருகிறார். அத்தோடு சினிமாவில் நடிப்பதையும் நிறுத்தாமல் நடித்து வருகிறார். இறுதியாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தார்.

நடிகை சிம்ரனுக்கு 44 வயதாகிறது, சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சிம்ரன் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது சில புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் பலர், அக்கா, எப்படி இருந்த ஒரு காலத்துல என்றும் உங்களுக்கு வயசாகிடிச்சி என்றும் வருத்தத்தோடு கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement