பிக் பாஸ் 4யில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களின் Get together – வைரலாகும் புகைப்படம்.

0
5188
BiggBoss
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 10 வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. ஆரம்பத்தில் 17 பேர் கலந்து கொண்டிருந்த இந்த சீசனில் இதுவரை ஏழு போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றார்கள். இந்த சீசனில் முதல் போட்டியாளராக பிரபல நடிகையான ரேகா வெளியேறி இருந்தார். அவரை தொடர்ந்து வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி ஆகியோர் வெளியேறியிருந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஜித்தன் ரமேஷ் ஏழாவது போட்டியாளராக வெளியேறி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த சீசனில் முதல் போட்டியாளராக வெளியேறிய ரேகா ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒரு முகம்தான். அதேபோல அவரைத் தொடர்ந்து வெளியேறிய வேல்முருகன், சுசித்ரா ஆகியோரும் ரசிகர்களுக்கு நன்கு அறிந்த ஒரு முகம்தான். இதுவரை வெளியேறிய போட்டியாளர்களில் ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாத நபர்களாக அறிமுகமானவர்கள் சம்யுக்தா மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி தான். அதேபோல கடந்த வாரம் வெளியேறிய சனம் ஷெட்டிக்கும் நேற்றைய நிகழ்ச்சியில் வெளியேறிய ஜித்தன் ரமேஷ் ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயமான ஒரு முகம்தான்.

இதையும் பாருங்க : செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்தி விலக்கப்பட்டாரா ? இல்லை விலகினாரா? காரணத்தை அன்றே சொன்ன ஜனனி.

- Advertisement -

இதுவரை வெளியேறிய மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை விட சனம் ஷெட்டியின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. அதே போல இந்த சீசனில் இருந்து வெளியேறிய அனைத்து போட்டியாளர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் பல்வேறு பேட்டிகளை கொடுத்து இருந்தார்கள். ஆனால், சனம் செட்டி மட்டும் எந்த ஒரு பேட்டியிலும் பங்கு பெறாமல் இருந்தார். இதனால் சனம் ஷெட்டி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், நேற்று சனம் ஷெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் நீண்ட மாதங்களாக தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்தித்தால் அவர்களுடன் நேரத்தை ஒதுக்கி இருந்தேன். அதனால்தான் வீடியோ வெளியிட தாமதம் ஆனது என்றும் கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டு இருந்தார். அதேபோல இன்று நிஷா வெளியேற இருக்கிறார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி, சம்யுக்தா, வேல்முருகன் ஆகியோர் ஒன்றாக சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்த புகைப்படத்தில் சுசித்ரா மற்றும் சனம் மட்டும் மிஸ் ஆகியுள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement