தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் சிம்ரன். இவர் கமல், ரஜினி, விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து உள்ளார். இவருடைய நடிப்புக்கும், நடனத்திற்கும் என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. பின் காலங்கள் செல்லச் செல்ல இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் சிம்ரன் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு சிறிது காலம் சிம்ரன் சினிமா துறையிலிருந்து பிரேக் எடுத்துக்கொண்டார். மேலும், இவர் தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் பாவக் கதைகள்’ ஆந்தாலஜியில் கௌதம் மேனன் இயக்கத்தில்,வான்மகள்’ கதையில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இது ஒடிடியில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நடிகை சிம்ரன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். அதில் அவரிடம் விஜய்க்கு அம்மாவா நடிப்பீர்களா? என்று கேட்டார்கள்.
இதையும் பாருங்க : அந்த மாதிரி ஆளுங்கள பாத்தா தான் நாய் குறைக்கும் – சூர்யா ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டரை கேலி செய்த BJP நடிகை.
அதற்கு சிம்ரன் கூறியிருப்பது, நான் கன்னத்தில் முத்தம் இட்டால், வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் அம்மாவாக நடித்தேன். அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க சொல்லி என்னிடம் கேட்டாலும் அது எனக்கு பிடித்து இருந்தால் மட்டும் தான் ஓகே சொல்வேன். அதற்காக விஜய்க்கு அம்மாவா? நடிப்பீர்களா? என்று கேட்டால் அது நிச்சயம் நடக்காத விஷயம். மக்களும் அதை ஏற்க மாட்டார்கள் என்று புன்னகையுடன் கூறியுள்ளார். இப்படி இவர் கூறிய பதில் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் ஒரு சில ஜோடிகள் தான் என்றும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடிக்கும். அந்த வகையில் சிம்ரன்– விஜய் ஜோடி என்றென்றும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. சிம்ரன் அவர்கள் விஜயுடன் ஒன்ஸ்மோர், பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும், உதயா போன்ற பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இதில் ஒன்ஸ்மோர், பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய மூன்று படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.