தமிழ், தெழுங்கு என 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் சிவ ரஞ்சனி. மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் 1991ஆம் ஆண்டு மிஸ்டர் கார்த்திக் என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். நன்றாக நடிக்கும் திறமை இருந்த அவருக்கு அடுத்தடுத்து பல படங்களில் இவருக்கு வாய்ப்புகள் குவியத் துவங்கியது. அதன் பின்னர் 1999 வரை தமிழில் கிட்டத்தட்ட முன்னணி நடிகை ஆகிவிட்டார்.
இவரது பூர்வீகம் சென்னை மைலாப்பூர் ஆகும். ஆனால் ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தில் இருந்து வந்த இவர் சிறு வயதில் இருந்தே டான்சில் கை தேர்ந்தவர். மேலும், தனது கல்லூரி காலத்தில் இருந்தே பல நாடகங்ளில் நடித்து பாராட்டுக்கள் பெற்றவர்.

1999க்கு பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்துடன் காதல் வயப்பட்டு அவருடன் திருமணம் செய்து செட்டில் ஆகி விட்டார். இவர்களுக்கு ரோகன், ரோஷன் மற்றும் மேத்தா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் மூத்த மகனான ரோஷன் தற்போது நிர்மலா கான்வெண்ட் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

ரோஷன் இன்னும் கல்லூரி படிப்பை கூட முடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிர்மலா கான்வெண்ட் படத்தை பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுன தயாரிக்கிறார். இந்த படத்தில் ரோஷனுக்கு ஹீரோயினாக, சில்லுன்னு ஒரு காதல் படத்தில் ஜோதிகா சூர்யாவிற்கு மகளாக நடித்த ஸ்ரீயா ஷர்மா நடிக்கிறார்.

Advertisement

இந்த படம் முடிந்ததும் அமெரிக்கா சென்று தனது கல்லூரி படிப்பை முடிக்கவுள்ளர் ரோஷன். படம் நடிப்பது என்பது ஒரு ஹாபி இதற்காக படிப்பினை விட்டுவிடக் கூடாது என ரோஷனின் தந்தை உறுதியாக உள்ளார்.
திருமணத்திற்கு பிறகு 3 குழந்தைகள் ஆகிவிட்டதால் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார் சிவரஞ்சனி. மேலும், குடும்பம் மட்டும் குழந்தைகளை பார்த்துக்க கொள்ளவே நேரம் சரியாக இருக்கிறது என்று இருக்கிறார் சிவரஞ்சனி.

Advertisement
Advertisement