தந்தையின் 70வது பிறந்தநாளுக்கு எதிர்பாராத சர்பிரைஸ் கொடுத்த சினேகா – என்ன தெரியுமா ?

0
1359
sneha
- Advertisement -

தனது தந்தையின் 70வது பிறந்தநாளுக்கு நடிகை சினேகா கொடுத்த சர்ப்ரைஸ் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சினேகா. இவர் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ‘இங்கே ஒரு நீலப்பக்சி’ என்ற மலையாள மொழித் திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானர். அதன் பின் இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என்று பல டாப் நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். அதோடு சினேகாவின் சிரிப்பு ஒன்றே போதும் ரசிகர்கள் விழுவதற்கு. அதனாலேயே அவரை ‘புன்னகை அரசி’ என்று தான் அழைப்பார்கள்.

- Advertisement -

சினேகா-பிரசன்னா திருமணம்:

இதனிடையே சினேகா-பிரசன்னா காதல் சோசியல் மீடியாவில் உலா வந்தது. 2009 ஆம் ஆண்டு சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் தான் இணைந்தார். பின் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது விகான் ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது.

சினேகா-பிரசன்னா குடும்பம்:

பின் சினேகா-பிரசன்னா இருவருக்கும் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. இந்த செய்தியை ஒரு வித்யாசமான புகைப்படத்தை பதிவிட்டு நடிகர் பிரசன்னா ‘தை மகள் பிறந்தாள்’ என்று பதிவிட்டு இருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் குட்டி ஸ்னேகா பிறந்து விட்டார் என்று வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக சினேகா-பிரசன்னா ஒற்றுமையாக சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-

சினேகா-பிரசன்னா திரைப்பயணம்:

அதோடு இருவருமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்கள். அதனால் தங்களுடைய குழந்தைகள் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், வீடியோக்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.
தற்போது சினேகா தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். பின் அவர் படங்களிலும் நடித்து வருகிறார். அதே போல தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக அறிமுகமான நடிகர் பிரசன்னா தற்போது மிரட்டலான வில்லன், அற்புதமான நடிகர் என்ற பெயரையும் எடுத்து இருக்கிறார்.

சினேகா கொடுத்த சர்ப்ரைஸ்:

இந்த நிலையில் ஸ்னேகா தன்னுடைய தந்தைக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சினேகாவின் தந்தைக்கு 70வது பிறந்த நாள். சென்னை செங்குன்றத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு சினேகா அப்பாவை அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர் தன் இரண்டு குழந்தைகளுடன் தனது தந்தையின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு பரிமாறியதுடன் புத்தகமும் வழங்கி இருக்கிறார்.

Advertisement