தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு ரியல் லைப் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். ரஜினி – லதா, அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் குயூட் தம்பதிகளாக திகழ்ந்து வருபவர்கள் சினேகா பிரசன்னா ஜோடி. 2009 ஆம் ஆண்டு சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் தான் இணைந்தார். பின் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது விகான் ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது. சமீபத்தில் சினேகா அவர்களுக்கு அழகான பெண் குழந்தை கூட பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆத்யந்தா என்ற பெயரை வைத்துள்ளனர்.இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய பிரசன்னா, தங்களுக்கு பிறக்க போகும் முதல் குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று ஆசைபட்டோம்.
அதனால் நாங்கள் ஆத்யா என்ற பெயரை வைக்கலாம் என்று யோசித்தோம். ஆனால் ,முதல் குழந்தை ஆண் குழந்தையாக போய்விட்டது. தற்போது என் மகளுக்கு ஆத்யா என்ற பெயரை தாண்டி வேறு எந்த பெயரையும் யோசிக்க தோணவில்லை. எனவே, கொஞ்சம் வித்யாசமாக ஆத்யந்தா என்று வைத்துளோம்.அப்படி என்றால் ‘ஆதியும் அந்தமும் அற்றவள்’என்று அர்த்தம் என்று கூறியிருந்தார். இரண்டாவது குழந்தைக்கு பின்னர் நடிகை சினேகா படு குண்டாக மாறி விட்டார்.
இதனால் உடல் எடையை குறைக்க கடுமையாக உடற்பயிற்சகளை செய்து வந்தார் சினேகா. தற்போது அதற்கான பலனையும் அடைந்துள்ள ஸ்னேகா மீண்டும் உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ளார். சமீபத்தில் படு மாடர்ன் லுக்கில் போட்டோ ஷூட் நடத்தியுள்ள ஸ்னேகா, சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.