தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்து இருந்தவர் சோனா. இவர் தமிழில் 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின்னர் இவர் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பின் இவர் சில காலம் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து இருக்கிறார். அதிலும் இவர் வடிவேலு, விவேக் போன்ற பல நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்திருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் நடிகை சோனா அவர்கள் வெங்கட் பிரபுவின் உதவியாளர் இயக்கிய கனிமொழி என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார். அந்த படம் எதிர்பார்த்தளவிற்கு வெற்றியடைவில்லை. இதனால் சோனாவிற்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் தான் ஏற்பட்டது. அதற்குப் பிறகு சோனா படங்களை தயாரிக்காமல் நடித்து மட்டும் வந்தார். மேலும், இடையில் சில ஆண்டுகள் இவர் டங்களிலிருந்தும் விலகி இருந்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி இருந்த அபி டெய்லர் என்ற சீரியலில் வில்லியாக நடித்திருந்தார்.
சோனா திரைப் பயணம் :
அதனை அடுத்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மாரி என்ற சீரியலும் வில்லியாக நடித்திருந்தார். ஆனால், திடீரென்று அந்த சீரியலில் இருந்து சில பிரச்சனையின் காரணமாக சோனா விலகிவிட்டார். தற்போது சோனா ஸ்மோக் என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார். இந்த தொடரை சோனாவே எழுதி இயக்கி இருக்கிறார். சொல்லப்போனால், இந்த தொடரின் இயக்கி இவர் இயக்குனராகவும் அறிமுகமாக இருக்கிறார். இவர் தன்னுடைய வாழ்வில் நடந்த பல சம்பவங்களை கதையாக எழுதி இந்த வெப் தொடரை இயக்கி வருகிறார். இந்த வெப் சீரிஸ் எட்டு எபிசோடுகளாக உருவாகி இருக்கிறது. இது சோவின் 5 வயது முதல் தற்போது வரை நடந்த சம்பவங்களை வைத்து எடுத்து இருக்கிறார்கள்.

சோனா பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சோனா, தெலுங்கில் ஒரு குடும்பம் என்னை பார்த்துக் கொள்வதாக சொல்லி அழைத்துப் போனார்கள். அங்கு கிளாமராக துணி எல்லாம் கழட்டி நடிக்க வைத்தார்கள். அது என்னை ரொம்பவே காயப்படுத்தி இருந்தது. இனி நடிப்பே வேண்டாம் என்று வந்து விட்டேன். அதற்கு பிறகு தான் சிவப்பதிகாரம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தேன். காரணம், உடம்பு சரியில்லாத அம்மா, தங்கைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் மீண்டும் கிளாமர் ரோலில் நடித்தேன். அந்த படத்தில் ஒரு தெப்பக்குளத்தில் ஒரு காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது. அங்கு விஷால், மற்ற நடிகர்கள் எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னார்கள்.
விஷால் செய்த வேலை:
நானும் தைரியமாக நடிக்க போனேன். லைட் ஆன் பண்ணதுமே ஒரு 400 பேர் என்னை சுற்றி இருந்தார்கள். நான் ரொம்பவே பயந்து அங்கிருந்து ஓடி விட்டேன். அதற்கு பிறகு ஒரு ஒன்றரை மணி நேரம் விஷால்,படகுழுவினர் என்னை கன்வின்ஸ் பண்ணி, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். அப்போதுமே கூட்டம் குறையவில்லை. யாரும் என்னிடம் நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டார்கள். முதல் நாள் 400, இரண்டாவது நாள் 800, மூன்றாவது நாள் 1200 பேர் என்று நாட்கள் செல்ல செல்ல ஆட்களும் கூடிக்கொண்டே இருந்தார்கள். கண்ணிலே என்னை ரேப் செய்வது போல பார்த்தார்கள். அதெல்லாம் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. எதற்காக இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.
https://www.youtube.com/watch?v=8gjuWKEfZRI
விமர்சனங்கள் பற்றி சொன்னது:
இன்னும் சொல்ல வேண்டும் என்றால், நான் கிளாமராக நடித்ததை விட இப்போது இருக்கும் நடிகைகள் மூன்று மடங்கு கிளாமராக நடிக்கிறார்கள். ஆனால், அவர்களை யாரும் அப்படி பார்ப்பதில்லை, தவறாக பேசுவதில்லை. காரணம், அவர்கள் ஹீரோயின். நான் அந்த அளவிற்கு ஒன்றும் கிளாமராக நடிக்கவில்லை. இருந்தாலுமே எனக்கு கிளாமர் சோனா, ஹாட் சோனா என்று முத்திரை கொடுத்து விட்டார்கள். அதுதான் ஏன் என்று நான் மக்களிடம் கேட்கிறேன். அதேபோல் ஒருவரிடம் படுத்துவிட்டு படம் புக் செய்வதற்கு பதில் கொஞ்சம் கிளாமர் காட்டி நடித்து விடலாம் என்று தான் நான் நினைத்தேன். காரணம் என்ன குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு என்னிடம் இருந்தது என்று எமோஷனலாக பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.






