சமீபத்தில் பெப்சி அமைப்பு முன்பு நடிகை சோனா அவர்கள் தர்ணா போராட்டம் செய்தார். இதற்கு காரணம், சோனா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஸ்மோக் படத்தினுடைய காட்சி வீடியோவை தராமல் இழுத்தடிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தான் இந்த போராட்டத்தை நடத்தி இருந்தார். மேலும், இது தொடர்பாக வெளியிட்ட வீடியோவில் சோனா, நான் இந்த சினிமாத்துறைக்குள் நுழைந்து 25 வருடம் ஆகிவிட்டது. நான் படம் நடிக்கிறேன், தயாரிக்கிறேன். என்னென்னமோ பண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால், பத்து வருஷமாக என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள்.

அதற்கு காரணம், ஒரே ஒருவாட்டி நான் வாயை திறந்து என் மேல ஒருத்தன் கைய வச்சுட்டான் என்று சொல்லிவிட்டேன். அதுக்கு இத்தனை வருடமாக என்னை உட்கார வைத்து விட்டார்கள். இதுதான் நடக்கும் என்று எனக்கும் தெரியும். அதனால் தான் நான் ஒதுங்கி விட்டேன். நான் ஒரு படத்தை இயக்கி ஓடிடியில் வெளியிட ஒப்பந்தம் போட்டேன். பூஜை போட்ட நாளிலிருந்து இப்போது வரை பிரச்சனையாக தான் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு வழியாக எல்லா பிரச்சினையும் முடிந்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். ஒரு மேனேஜரை வேலையில் வைத்திருந்தோம். காசை வாங்கிக் கொண்டு அந்த மேனேஜர் ஏமாற்றி விட்டார்.
சோனா விவகாரம்:
என்னுடைய படத்தின் ஹார்ட் டிஸ்கை கேமரா யூனிட் இடம் கொடுத்து விட்டார். இது தொடர்பாக நான் பெப்சி அமைப்பிடம் புகார் அளித்தேன். அவர்கள் பிரச்சினையை முடித்து தருவதாக சொன்னார்கள். ஆனால், அதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருக்குமே காசு தரவேண்டும் என்று சொல்கிறார்கள். அந்த பிரச்சனை தாண்டி வந்த பிறகு தற்போது என்னுடைய ஒரு ஹார்ட் டிஸ்கை வாங்கிக் கொண்டு தர மறுக்கிறார்கள். இரவு ஒரு மணிக்கு எனக்கு போன் செய்து மிரட்டுகிறார்கள். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை பெப்சி அலுவலகத்தில் இருந்து போராடுவேன் என்று வேதனையில் பேசி இருந்தார்.
https://www.youtube.com/watch?v=dinlqRe7PTU
சோனா பேட்டி:
பின் இந்த பிரச்சனைக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தினால் தலையிட்டு சுமூகமாக தீர்த்து ஹார்ட் டிஸ்கை சோனாவிற்கு மீட்டு கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அளித்த பேட்டியில் சோனா, பல மாதங்களாக கஷ்டப்பட்டபோதும் நாமெல்லாம் ஒரே குடும்பம் என்ற உணர்வால் தான் இந்த விஷயத்தை பொதுவெளிக்கு கொண்டு வராமல் இருந்தேன். அதுவும் போக சம்பந்தப்பட்ட அந்த மேனேஜருக்கு மூன்று பெண் குழந்தைகள். புகார் என்று போனால் அவருடைய வேலை போய், குழந்தைகள் எல்லாம் ரொம்ப பாதிக்கப்படுவார்கள் என்று யோசித்துதான் அமைதியாக இருக்கிறேன். ஆனால், அவரும் நான் அப்படித்தான் பண்ணுவேன். உன்னால் என்ன பண்ண முடியுமோ? செய் என்ற தோரணையிலேயே என்னிடம் நடந்து கொண்டார்.

ப்ரச்சனை தீர்ந்தது:
அவருக்கு சப்போர்ட்டுக்கு அவரைப் போலவே சில பேரை கையில் வைத்துக்கொண்டு தேவையில்லாத வேலையெல்லாம் செய்தார். அதனால் தான் நான் வேறு வழி இல்லாமல் தர்ணா போராட்டத்தை கையில் எடுத்தேன். சினிமா துறையில் நான் ஒரு விஷயத்தில் இறங்கிட்டேனா, அதில் ஒரு தீர்வு வாங்காமல் திரும்ப மாட்டேன் என்று பலருக்குமே தெரியும். இப்பவும் அப்படித்தான் நல்ல தீர்வு கிடைத்திருக்கிறது. தர்ணா முடிந்த மறுநாளே நடிகர் சங்கத்திலிருந்து சில நிர்வாகிகள் தொடர்பு கொண்டு பிரச்சனை குறித்து கேட்டிருந்தார்கள். நடிகர் கருணாஸ் பார்த்துக் கொள்ளலாம். நாங்க இருக்கோம் என்று சொன்னார்.
நன்றி சொன்ன சோனா:
நடிகர் சங்கம் தலையிடுகிறது என்று தெரிந்ததுமே உடனே பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டார்கள். பெப்சி தலைவர் செல்வமணி சார், நடிகர் சங்கத்தின் சில நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் எல்லாத்தையும் நான் சொன்னேன். ஒரு கட்டத்தில் அவர்களுக்கே நான் ஏமாந்தது தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்ட நபரை கூப்பிட்டு ஹார்ட் டிஸ்கைக்கை கொடுக்க சொன்னார்கள். அந்த நபருமே ஹாட் டிஸ்க்கை கொடுத்து விட்டார். இந்த நேரத்தில் எனக்கு உதவியாக இருந்தவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.






