12 படங்களை நிராகரித்து இருக்கிறேன். நடிகை சோனா வெளியிட்ட உருக்கமான அறிக்கை.

0
5003
Sona
- Advertisement -

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை சோனாவை யாரும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. தமிழில் 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனா. அதன் பின்னர் ஷாஜகான் வில்லன் போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகை சோனா. மேலும், இவர் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு பட்டத்தை வென்றவர் என்பதும் குறிபிடத்தக்கது.

-விளம்பரம்-
Image result for actress sona

- Advertisement -

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த சோனாவுக்கு தொடர்ச்சியாக கவர்ச்சி கதாபாத்திரமே தேடி வந்ததால் சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகி இருந்தார் சோனா. இறுதியாக பிரசாந்த் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஜானி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. சமீபத்தில் நடிகை சோனா பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த கவர்ச்சிப் புகைப்படங்கள் வைரலாக பரவி வந்தது. இதனால் நடிகை சோனா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தாராம்.

இதையும் பாருங்க : விருது விழாவிற்கு கிளாமரான உடையில் சென்ற அருவி பட நடிகை அதிதி பாலன்.

மேலும், சோனா இறுதியாக நடித்த ஜானி படத்திற்கு பின்னர் அவர் நடித்த படங்கள் எதுவும் தமிழில் வெளியாகவில்லை . இந்நிலையில் நடிகை சோனா சினிமாவில் நடிக்காமல் இருப்பதற்கு பலரும் பல்வேறு விசயங்களையும் விளக்கங்களையும் செய்தியாக்கி வருகிறார்கள். இதனால் இதுகுறித்து நடிகை சோனாவே அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, “சிலர் என்னைத் திரையில் காணவில்லை. ஏன் படங்களில் நடிப்பதில்லை. எங்கே போய்விட்டீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த வருடத்தில் நான்கு படங்களில் நடித்திருக்கிறேன். 12 படங்களை நிராகரித்திருக்கிறேன் பணத்தை விட நிம்மதியும் மனநிறைவும் முக்கியம் என நினைக்கிறேன்.

-விளம்பரம்-
Related image

மேலும் எனக்கு பணத்திற்காக ஓட வேண்டிய அவசியமும் இல்லை. முன்பு போல் அல்லாமல் இப்போது முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன். வரவிருக்கும் 2020-ம் ஆண்டு எனக்கு சினிமாவில் நல்ல கதாபாத்திரங்கள் அமையும் என்று நம்புகிறேன். இந்த வருடம் நான் சேஸிங், பரமபதம் விளையாட்டு, அசால்ட், தேடுதல், பச்ச மாங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறேன்” இவ்வாறு நடிகை சோனாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இனி வரும் காலங்களில் நடிகை சோனாவை நல்ல கதாபாத்திரங்களில் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement