உடல் எடை குறைத்து படு ஸ்லிம்மான சோனா – அவர் நடிக்கும் முதல் சீரியல் – அதுவும் எந்த சேனலில் தெரியுமா ?

0
4022
Sona
- Advertisement -

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை சோனாவை யாரும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. தமிழில் 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனா. அதன் பின்னர் ஷாஜகான் வில்லன் போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகை சோனா. மேலும், இவர் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு பட்டத்தை வென்றவர் என்பதும் குறிபிடத்தக்கது.

-விளம்பரம்-

பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த சோனா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் ஒன்றில் , “சிலர் என்னைத் திரையில் காணவில்லை. ஏன் படங்களில் நடிப்பதில்லை. எங்கே போய்விட்டீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த வருடத்தில் நான்கு படங்களில் நடித்திருக்கிறேன். 12 படங்களை நிராகரித்திருக்கிறேன் பணத்தை விட நிம்மதியும் மனநிறைவும் முக்கியம் என நினைக்கிறேன்.

இதையும் பாருங்க : பொண்டாட்டியா இருந்தாலும் இப்படியா நடந்துகொள்வது. கணவருடன் சேர்ந்து படு மோசமாக வீடியோ வெளியிட்ட ஸ்ரேயா.

- Advertisement -

மேலும் எனக்கு பணத்திற்காக ஓட வேண்டிய அவசியமும் இல்லை. முன்பு போல் அல்லாமல் இப்போது முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன். வரவிருக்கும் 2020-ம் ஆண்டு எனக்கு சினிமாவில் நல்ல கதாபாத்திரங்கள் அமையும் என்று நம்புகிறேன். இந்த வருடம் நான் சேஸிங், பரமபதம் விளையாட்டு, அசால்ட், தேடுதல், பச்ச மாங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறேன்” என்று கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் நடிகை சோனா சிரியலிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் அபி தொடரில் நடிக்க இருக்கிறார். இந்த சீரியலுக்காக உடல் எடையை குறைத்து படு ஸ்லிம் தோற்றத்திற்கு மாறியுள்ளார். இதுகுறித்து பேசிய சோனா, ஆரம்பகாலத்தில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்ததால் தமிழில் தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களே தேடி வருகிறது. ஆனால் மலையாளத்தில் அப்படி அல்ல அங்கு வில்லி, குணச்சித்திரம் என பலவிதமான வேடங்களில் நடித்துவிட்டேன். தற்போது அபி டெய்லர்ஸ் டிவி சீரியலில் நடிப்பதால் சினிமாவை விடும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement