இந்தியில் 2010 ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான “தபாங் ” படத்தில் கதாநாயகியாக நடித்து இந்தி சினிமா ரசிகர்களை கவர்ந்தவர். 8 ஆண்டுகளாக இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வரும் இவர் தற்போது தனது உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
The question is… do i wanna be seen or not? #camoswag pic.twitter.com/RzrmQVAFkj
— Sonakshi Sinha (@sonakshisinha) July 6, 2018
பாலிவுட் சினிமாவில் ஒல்லி பெல்லி நடிகைகளை பார்த்து சலித்து போன இந்தி ரசிகர்களுக்கு , சற்று பூசலான தோற்றத்தில் அறிமுகமன சோனாக்ஷி ரசிகர்களுக்கு சற்று புதுமையாக தெரிந்தார். இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.
பாலிவூடில் முன்னணி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்து வந்த இவர், தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான “லிங்கா ” படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சியமானார். ஆனால், போக போக சற்று உடல் எடை கூட பட வாய்ப்புகள் குறைய துவங்கியது.
இதனால் தனது உடலை குறைக்க முடிவு செய்த சோனாக்ஷி கடுமையான டயட் மற்றும் உடல் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். சமீபத்தில் தனது ஒல்லியான புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகியுள்ளனர்.