‘கைல துப்பாக்கி இருந்தா அங்கேயே அவங்கள சுற்றுவேன்’ – படு கோபமாக பேசிய சோனியா அகர்வால்.

0
295
sonia
- Advertisement -

கையில் துப்பாக்கி இருந்தால் அவர்களை அங்கேயே சுட்டு விடுவேன் என்று நிகழ்ச்சி ஒன்றில் சோனியா அகர்வால் அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் 90ஸ் மற்றும் 2k ரசிகர்களால் மறக்க முடியாத நடிகைகளில் ஒருவர் சோனியா அகர்வால். இவர் சண்டிகாரை சேர்த்தவர். இவர் 1982ஆம் ஆண்டு பிறந்தவர். ஆரம்பத்தில் மாடலிங்கில் கொடிகட்ட பறந்த இவரை இயக்குனர் செல்வராகவன் அழைத்து வந்து தன்னுடைய காதல் கொண்டேன் படத்தில் அவருக்கு அறிமுகம் செய்து வைத்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் தனுஷ் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், காதல் கொண்டேன் படத்திற்கு பின்னர் சோனியா அகர்வால் அவர்கள் சிம்புவுடன் கோவில், விஜயுடன் மதுர, 7g ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, திருட்டு பயலே உள்ளிட்ட பல சூப்பர் ஹிட்டான படங்களில் நடித்து இருக்கிறார். பெரும்பாலும் தமிழ் படங்களில் மட்டுமே நடித்த சோனியா தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

சோனியா அகர்வால் – செல்வராகவன்:

பின்னர் சோனியா அகர்வால் , இயக்குனர் செல்வராகவனுடன் ஏற்பட்ட காதலினால் 2006ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண பந்தம் 2010வரை மட்டுமே நீடித்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரம் பேசி விவகாரத்து பெற்றுக் கொண்டனர். சோனியாவுக்கு இருந்த குடிப்பழக்கத்தால் தான் இவரை செல்வராகவன் பிரிந்துவிட்டார் என்றும் கூறப்பட்டது. பிறகு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர்.

சோனியா அகர்வால் நடிக்கும் படங்கள்:

விவாகரத்திற்குப் பிறகு சோனியா அகர்வாலுக்கு தொடர்ந்து ஹீரோயினியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்காததால் இப்போது கவர்ச்சி கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ், மலையாளம், கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், இவர் தொலைக்காட்சிகளில் தொடர்களில் கூட நடித்திருக்கிறார். தற்போது சோனியா சோனியா அகர்வால் நடித்திருக்கும் படம் கிராண்மா.

-விளம்பரம்-

கிராண்மா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு:

இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஷிஜின்லால் எஸ்எஸ் இயக்கி இருக்கிறார், இந்த படத்தில் விமலா ராமன், ஷர்மிளா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கிறது. வரும் 27ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோனியா அகர்வாலிடம் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

சோனியா அகர்வால் கூறியிருந்தது:

அதற்கு சோனியா அகர்வால் கூறியிருந்தது, அத்தகைய செய்திகளை பார்க்கையில் நான் ரொம்பவும் எமோஷனல் ஆகிவிடுவேன். உலகம் எங்கே போகிறது என்பதை பார்க்கும்போது ரொம்பவும் வருத்தமாக உள்ளது. நம் எல்லோருக்குமே குழந்தை உள்ளது. எனக்கு குழந்தை இல்லாவிட்டாலும் கூட என்னுடைய குடும்பத்தில் குழந்தைகள் உள்ளனர். எப்படி குழந்தைகளுக்கு எதிராக இப்படிப் யோசிக்கிறார்கள், இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதே புரியவில்லை. என் கையில் துப்பாக்கி மட்டும் இருந்தால் அங்கே அவர்களை சுட்டு விடுவேன். அதே நேரத்தில் சட்டத்தை மீறி நாம் செயல்பட முடியாது என்று தெரிவித்து இருந்தார்.

Advertisement