இந்த மாதிரி நடிக்க சொல்லி நயன்தாரா கிட்ட கேளுங்களேன் பாப்போம் – சோனியா அகர்வால்.

0
1393
sonia
- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. தற்போது உள்ள முன்னணி கதாநாயகிகள் இவர்தான் போட்டியாக இருந்து வருகிறார். அதேபோல பல இளம் கதாநாயகிகளுக்கு இவர் ஒரு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்த சோனியா அகர்வால் நயன்தாரா மற்றும் த்ரிஷா குறித்து பேசியிருக்கிறார்.

-விளம்பரம்-

நடிகை சோனியா அகர்வால் சண்டிகாரை சேர்த்தவர். மார்ச் 28 1982ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு தற்போது 35 வயதாகிறது. அங்கு உள்ள பாரம்பரிய பஞ்சாபி குடும்பத்தை சார்ந்தவர். மாடலிங்கில் கொடிகட்ட பறந்த அவரை இயக்குனர் செல்வராகவன் அழைத்து வந்து தன்னுடைய காதல் கொண்டேன் படத்தில் அவருக்கு அறிமுகம் கொடுத்தார்தமிழில் வெளியான காதல் கொண்டேன் படம் இருக்கு ஒரு ப்ரேக் கொடுத்தது.அதன் பின்னர் முன்னணி நடிகையாக இவர், சிம்புவுடன் கோவில், விஜயுடன் மதுர, பின்னர் கோவில், ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, திருட்டு பயலே உள்ளிட்ட ஹிட்டான படங்களில் நடித்தார்.

- Advertisement -

2006ல் இயக்குனர் செல்வராகவனுடன் ஏற்பட்ட காதலினால் அவருடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 2010வரை மட்டுமே நீடித்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரம் பேசி விவகாரத்து பெற்றுக்கொண்டனர். தற்போது சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்க்ஸை தொடர்ந்துள்ள இவர் பேட்டி ஒன்றில் கூறியதாவது.

’நான், திரிஷா, நயன்தாரா மூணு பேரும் ஒரே வயதுக்காரர்கள். 82-83ல பிறந்தவர்கள். ஆனால் என்னிடம் `நீங்க அம்மா கேரக்டர்ல நடிப்பீங்களா’னு கேட்டுட்டு வரும்போது எனக்கு ஆச்சர்யமா இருக்கு. இதே கேள்வியை நீங்க திரிஷாகிட்டயோ, நயன்தாராகிட்டயோ கேட்பீங்களானு கேட்டிருக்கேன். ஒருவேளை நான் வயசானவ மாதிரி மாறியிருந்தாலோ, உடம்பை பிட்டா வெச்சுக்கலைன்னாலோகூட ஓகே. நான் இளமையா இருக்கேன். உடற்கட்டை பராமரிக்கிறேன். அப்படியிருக்கும்போது ஏன் அம்மா கேரக்டருக்கு என்னை யோசிக்கிறீங்க?என்று கூறியுள்ளார்

-விளம்பரம்-
Advertisement