தங்குமிடம் கூட இல்லை, வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் – அதே நாட்டில் சிக்கியுள்ள நடிகை கோரிக்கை.

0
917
soundaryasharma
- Advertisement -

உலகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதனால் உலகம் முழுவதும் உள்ள அரசாங்கம், காவல்துறை, தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள் என எல்லோரும் தங்களுடைய உயிரை பணயம் வைத்து போராடி வருகிறார்கள். கொரோனா காரணமாக மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதற்காக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். ஊரடங்கு உத்தரவால் பொது இடங்கள், கடைகள், தியேட்டர், கோவில்கள், போக்குவரத்து என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

-விளம்பரம்-
Soundarya Sharma

கொரோனாவினால் லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய சொந்த இடங்களை விட்டு பல்வேறு இடங்களில் தங்கி சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களால் நாடு திரும்ப முடியாமலும், தங்குவதற்கு சரியான இடம் அமையாமலும் தவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல நடிகையும் அமெரிக்காவில் சரியான தங்கும் இடம் இல்லாமல் உணவு இல்லாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : 38 வயதில் கடற்கரையில் இப்படி ஒரு கிளாமர் போஸ். சேரன் பட நடிகை விமலா ராமனின் புகைப்படங்கள்.

- Advertisement -

ராஞ்சி டைரிஸ் படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் சவுந்தர்யா சர்மா. இந்த படத்தை அனுபம் கெர் தயாரித்து இருநாதர்கள். இந்த படத்துக்காக பல விருதை வாங்கி உள்ளார். சவுந்தர்யா சர்மா பல் மருத்துவர். இருந்தாலும் இவர் நடிப்பு மீது இருந்த அதிக ஆர்வம் காரணமாக தேசிய நாடகப்பள்ளியில் சேர்ந்து பயின்றார். தற்போது இவர் சொந்தமாக மஸ்டர்ட் அண்ட் ரெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

Actress Soundarya Sharma

இதன் மூலம் நடிகை சவுந்தர்யா சர்மா அவர்கள் படங்கள் தயாரித்து வருகிறார். இந்நிலையில் சவுந்தர்யா சர்மா அவர்கள் தனது படத்தின் வேலைகளுக்காக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிலிம் அகாடமியில் நடக்கும் ஒர்க்‌ஷாப்பில் கலந்துகொள்ள சென்றிருந்தார். பின் உலகம் முழுவதும் காட்டுத் தீயை விட வேகமாக கொரோனா வைரஸ் பரவியதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

-விளம்பரம்-

இதன் காரணமாக சர்வதேச விமானங்கள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் சவுந்தர்யா சர்மா அவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் அங்கே சிக்கி கொண்டு உள்ளார். தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பது அமெரிக்காவில் தான். அமெரிக்காவில் கொரோனா விஸ்வரூபம் எடுத்து ஆடுகிறது. இந்நிலையில் நியூயார்க்கில் சிக்கி உள்ள நடிகை சவுந்தர்யா அவர்கள் மாணவர்களை மீட்க வேண்டும் என்று இந்திய அரசாங்கத்திடம் உதவி கேட்டு கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் பாருங்க : தமிழ் படம் 2-வில், விக்ரமின் இந்த படத்தின் கெட்டப்பையும் விட்டு வைக்காத சதிஷ். ஆனால், இது படத்தில் வரலயாம்.

இங்கு சுமார் 400 மாணவர்கள் இங்கு சிக்கியுள்ளனர். தற்போது இங்கு உயிர் வாழ்வதற்கு கடினமான சூழல் நிலவுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரமும் சவாலாக இருக்கிறது. சரியான தங்கும் இடம்,உணவு உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்திய தூதரகம் அவர்களுக்கு எந்த உதவியையும் செய்யவில்லை. அதனால் மத்திய வெளியுறவு அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17265 ஆகவும், 543 பேர் பலியாகியும் உள்ளார்கள். நாளுக்கு நாள் ஒட்டுமொத்த உலகமும் கொரோவினால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை மீண்டும் மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement