ஹாய் முருகதாஸ் ஜி.! கிரீன் பார்க் ஹோட்டல் நினைவிருக்கா.? சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீ ரெட்டி

0
530
Sri-reddy

தெலுங்கு சினி உலகை சில மாதங்களாக ஆட்டிப்படைத்து வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி .சில மாதங்களாக ட்விட்டரில் ஸ்ரீ ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் தன்னுடன் நெருக்கமாக இருந்த பிரபலங்கள், தன்னை படுக்கைக்கு அழைத்த தெலுகு பிரபலங்கள் என பலரின் பெயர்களை வெளியிட்டு வருகிறார்.

sri reddy

இந்நிலையில் சமீபத்தில் பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் குறித்து ட்விட்டரில் சர்ச்சையான பதிவை ஒன்று போட்டு தமிழ் சினிமா ரசிகர்களிடமும் சர்ச்சையை கிளப்புயுள்ளார்.பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி ட்விட்டரில் தன்னுடன் ஆபாசமாக பேசிய நபர்களின் தனிப்பட்ட வாட்ஸ் ஆப் உரையாடல்கள் ஸ்கிறீன்ஷூட்டை ட்விட்டரில் பதிவிட்டு வந்தார்.

சில மாதங்களாக இவரது சர்ச்சைக்குரிய டீவீட்டில் பாகுபலி புகழ் ரானவின் தம்பி அபிராம், தெலுங்கு நடிகர் நாணி, தெலுகு பவர் ஸ்டார் ரவி தேஜா போன்றவர்களின் பெயர்களும் அடிபட்டு டேமேஜ் ஆகின. இந்நிலையில் பிரபல தமிழ் பட இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தனக்கு பட வாய்ப்பு அளிப்பதாக கூறி ஏமாற்றி விட்டார் என்று ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் ஸ்ரீரெட்டியின் ட்விட்டர் பக்கத்தில்”ஹாய் தமிழ் டைரக்டர் முருகதாஸ்..எப்படி இருக்குறீர்கள்? கிறீன் பார்க் ஹோட்டல் ஞாபகம் இருக்கிறதா? வெளிகொண்டா ஸ்ரீநிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம். நீங்கள் எனக்கு பட வாய்ப்பு தருவதாக வாக்கு கொடுத்தீர்கள்.ஆனால், இதுவரை நீங்கள் அதை செய்யவில்லை. நீங்களும் சிறந்த மனிதர் தான் சார்” என்று பதிவிட்டுள்ளார்.

இதுவரை தெலுகு பிரபலங்களை இலக்காக வைத்து குற்றம் சாட்டி வந்த நடிகை ஸ்ரீரெட்டி தற்போது முதன் முறையாக தமிழ் இயக்குனர் ஒருவரை பற்றி சர்சைக்குரிய கருத்தை பதிவிட்டுள்ளது தமிழ் ரசிகர்களிடேயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.