நான் விபச்சாரியா..? அதிரடி காட்டிய ஸ்ரீ ரெட்டி..! இயக்குனர் மீது புகார்

0
382
Actress-Sri-Reddy

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி ‘தமிழ் லீக்ஸ்’ என்ற பெயரில் தமிழ் திரையுலக பிரபலங்களை பற்றிய சர்ச்சையான விடயங்ககளை முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இவர் கூறும் குற்றச்சட்டுகளுக்கு நடிகர் டி ஆர், நடிகை கஸ்தூரி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் சமீபத்தில் இயக்குனர் வாராகி, ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை பாலியல் எடுக்குமாறு தெரிவித்திருந்தார்.

Sri Reddy
Sri Reddy

நடிகை ஸ்ரீரெட்டி கூறி வரும் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றும், இது பின்புலம் இல்லாத குற்றச்சாட்டு என்றும் பலரும் கூறி வருகின்றனர். அதே போல ‘தான் இதை எதையும் விளம்பரத்திற்காக செய்யவில்லை, யாராவது ஒருவர் இந்த விடயங்களை வெளியில் கொண்டு வர வேண்டும், அதனால் தான் இதை செய்கிறேன்’ என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்திருந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் நடிகை ஸ்ரீரெட்டி கூறிவரும் குற்றச்சாட்டுகள் குறித்து இயக்குனர் வாராகி பேசுகையில் ”திரை உலகில் இருக்கும் பிரபலங்களை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் ஸ்ரீ ரெட்டி இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவர் அளித்து வரும் பேட்டிகளில் அவர் விபச்சாரத்தை ஒப்புக் கொண்டது போல் உள்ளது. எனவே, அவர்மீது விபச்சார சட்டத்தின் கீழ் வழக்க பதிவு செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

srireddy

இந்நிலையில் தன்னை அவதூறாக பேசியதாக இயக்குனர் வராகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ஸ்ரீரெட்டி புகார் மனு அளித்துள்ளார். மேலும், புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த நடிகை ஸ்ரீரெட்டி , “வாராகி என்பவர் யார்? நான் நடிகர்களுடன் பணம் வாங்கிக்கொண்டு படுப்பதை அவர் பார்த்தாரா என்ன. பின்னர் எப்படி என்மீது விபச்சார வழக்கை போட வேண்டும் என்று கூறியுள்ளார்.அவருடனும் நான் படுக்க வேண்டும் என்று நினைக்கிறாரா.” என்று மிகவும் ஆவேசத்துடன் பேசியுள்ளார்..