ரூ.240 கோடிக்காக ஸ்ரீதேவி கொலை..! நிழல் உலக தாதாவுக்கு தொடர்பு..! வெளிவந்த ரகசியம்.!

0
961

கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி துபாயில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். மேலும் அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி அவரது மரணம் இயற்கையானது என்று தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அவரது மரணம் குறித்த பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் அவர் ரூ.240 கோடி ரூபாய் காப்பீடு பணத்திற்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று உதவி ஆணையர் வேத் பூஷண் கூறியுள்ளார்.

sridevi

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் மும்பை காவல் துறையின் ஓய்வு பெற்ற உதவி ஆணையர் வேத் பூஷண் இது திட்டமிட்ட கொலை என்று திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரீ தேவி மரணமடைந்த நாள் முதல் அவர் திட்டமிட்டு தான் கொலை செய்துள்ளனர் என்று தொடர்ந்து தெரிவித்துவருகிறார். சமீபத்தில் இது பற்றி அவர் தெரிவிக்கையில் ” ஸ்ரீதேவி இறப்பிற்கான காரணம் அவர் தண்ணீர் தொட்டியில் மூச்சி திணறி இருந்திருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அவரது நுரையீரலில் எந்த அளவிற்கு தண்ணீர் இருந்தது என்று குறிப்பிடப்படவில்லை .அந்த விவரத்தை கேட்ட போதும் அதனை கூற துபாய் போலீசார் தர மறுத்து விட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

dawoodibrahim

இதுபற்றி மேலும் அவர் குறிப்பிடுகையில்”நடிகை ஸ்ரீதேவியின் மீது 240 கோடி ரூபாய் காப்பீடு இருந்தது. ஒருவேளை அவர் இந்தியாவில் இறந்தால் அந்த தொகை தொகை கிடைக்காது. அந்த காப்பிட்டு நிபந்தனைபடி அவர் துபாயில் இறந்தால் மட்டுமே அந்த தொகை அவருக்கு கிடைக்கும்” என்று அதிர்ச்சியான தகவல் ஒன்றையும் அவர் தெரிவித்துள்ளார்.