இறந்த நடிகை ஸ்ரீதேவியின் கழுத்தில் காயமா ? துபாய் அரசு போட்ட உத்தரவு

0
4589
actress sridevi
- Advertisement -

தனது 54 வயதில் திடீரென மாரடைப்பு வந்ததால் நேற்று காலமானார் நடிகை ஸ்ரீதேவி. நேற்றுவரை தினமும் நல்ல செய்திகளில் வந்துகொண்டிருந்த ஸ்ரீதேவி திடீரென்று உலகை விட்டு பிரிந்துவிட்டார்.ஆனால் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிகிறது. துபாயில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தபின்னர், அவருடைய கணவர் போனி கபூர் ஸ்ரீதேவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வண்ணம் அவரது ரூமிற்கு வந்துள்ளார்.

sridevi-death

வந்து ஸ்ரீதேவியை அசத்திவிட்டு வெளியே சென்று வந்து பார்க்கும் போது ஸ்ரீதேவி அசைவின்றி கிடந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு தூக்கி சென்று பார்த்தபோது ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டார் என அறிவித்துவிட்டனர்.பின்னர் துபாய் அரசின் சட்டப்படி வெளிநாட்டினர் துபாயில் இறந்துவிட்டால் முறையாக மருத்துவ பரிசோதனை செய்து பின்னர் எம்பாலமிங் செய்து சரியாக அறிக்கை கொடுத்த பின்னர் அவர்களது நாட்டிற்கு அனுப்பி விடுவார்கள்.

- Advertisement -

ஆனால் மரணத்தில் என்ன சந்தேகம் என்னவென்றால் ஸ்ரீதேவியின் கழுத்தில் காயம் இருந்துள்ளது. இதனை வைத்து அவரது மரணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் அவரது உடல் இன்று மாலை மும்பை வருகிறது. இதன் பின்னர் இந்தியாவில் நடைபெறும் விசாரணையில் உண்மை வெளிவரும்.

Advertisement