கடைசியாக விஜய் கேட்டதை மறுக்காமல் செய்த மறைந்த நடிகை ஸ்ரீதேவி !

0
3033

நடிகை ஸ்ரீதேவி தமிழ்த்திரையுலகில் 1980களில் மிகச்சிறந்த நடிகையாக வலம் வந்தவர்.இன்று காலை மாரடைப்பால் அவர் மரணமடைந்தது திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

uli

பிரபல முன்னனி நடிகர் நடிகைகள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.திருமணமான பின்னர் பாலிவுட் திரையுலகிலேயே தன் குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார் நடிகை ஸ்ரீதேவி.தமிழில் அவர் கடைசியாக நடித்த படம் புலி. இந்த படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்க ஸ்ரீதேவி வில்லியாக நடித்தார்.

25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகம் பக்கம் வராமலேயே இருந்த நடிகை ஸ்ரீதேவி விஜயின் அன்பு கோரிக்கையை ஏற்று உடனே புலி படத்தில் நடிக்க ஓகே சொன்னாராம்.அதன் பின்னர் வேறு எந்த தமிழ்ப்படங்களிலும் ஸ்ரீதேவி நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.