ஸ்ரீதேவி ஒயின் தான் குடிப்பார் ! அவர் கொலை செய்யப்பட்டார் – சர்ச்சையை உண்டாக்கிய பிரபலம்

0
5230
sri devi

நடிகை ஸ்ரீதேவியின் இறப்பு மீண்டும் மீண்டும் சர்சைக்குள்ளாகி வருகிறது. அவரது மரணம் கொலை கிடையாது, சுயநினைவின்றி நீரில் மூழ்கி இறந்துள்ளார் என துபாய் புலனாய்வு துறை கூறிவிட்டது.

Subramanian-Swamy-

ஆனால் தற்போது அவரது மரணம் குறித்து மேலும் சர்ச்சை பேச்சை பேசியுள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சு.சாமி. எங்காவது சர்ச்சை இருந்தால் உடனடியாக அதில் மூக்கை நுழைத்து மேலும் சர்ச்சை ஆக்குவது இவரது வாடிக்கை.

தற்போது ஸ்ரீதேவியின் மரணம் குறித்து சு.சாமி பேசியதாவது, ஸ்ரீதேவிக்கு குடிப்பழக்கம் இல்லை. அவர் எப்போதாவது வைன் மட்டுமே குடிப்பார். அதிலும் விருந்தினர்கள் வற்புறுத்தினால் மட்டுமே வைன் குடிப்பார்.இப்படிப்பட்டவர் எப்படி போதை தலைக்கேறும் அளவிற்கு குடித்திருப்பார். குடித்துவிட்டு எப்படி குளியலறை தொட்டியில் மூழ்கி இருப்பார். அவருக்கு யாராவது வழுக்கட்டாயமாக ஸ்ரீதேவிக்கு மதுவை ஊற்றிவிட்டிருப்பார்கள். இது திட்டமிட்ட கொலைதான் என கூறியுள்ள சு.சாமி