மலையாள சினிமாவுலகில் மிக பிரபல இயக்குனரான ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த திரிஷ்யம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் மோகன்லால், மீனா, பேபி எஸ்தர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் நல்ல வசூலையும், விமர்சனத்தையும் பெற்றுத் தந்தது. இந்த படத்தை கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி என 4 மொழிகளிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது. முதல் பாகம் முடிந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ‘திரிஷ்யம் 2’ படம் உருவாகி இருந்தது. படத்திலும் அதே 6 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் நடக்கும் கதையுடன் தான் துவங்குகிறது இந்த படம்.
சாதாரண கேபிள் ஆபரேட்டராக இருந்த மோகன்லால், இப்போது ஒரு தியேட்டர் உரிமையாளராக இருக்கிறார். தான் எழுதி வைத்திருக்கும் ஒரு கதையைப் படமாகத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.இவர்களின் மூத்த மகள் அன்ஸிபா, முன்பு நடந்த கொலை சம்பவத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார். மோகன்லாலின் வளர்ச்சியால் பொறாமையில் இருக்கும் சிலர் கொலையை அவர்தான் செய்ததாகவே நம்புகின்றனர்.
இதையும் பாருங்க : சந்திரமுகி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த சொர்ணமா இப்படி ஒரு கிளாமர் உடைகளில்.
இந்நிலையில், மோகன்லாலை மீண்டும் சிக்கவைக்க காத்திருக்கும் போலீஸுக்கு ஒரு துப்பு கிடைக்கிறது.இதனால் மீண்டும் சிக்கலில் மாட்டுகிறார் மோகன்லால்.இறுதியில் போலீசிடம் மோகன்லால் சிக்கினாரா? போலீஸ் விசாரணையை மோகன்லால் எப்படி எதிர்கொண்டனர்? இறுதியில் மோகன் லால் குடும்பம் தப்பித்ததா இல்லையா என்பது தான் கதை. முதல் பாகத்தை போலவே திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இரண்டாம் பாகத்தை தெலுங்கில் எடுத்து வரும் நிலையில் இரண்டாம் பாகத்தின் தமிழ் ரீ – மேக் உரிமையை நடிகை ஸ்ரீப்ரியா வாங்கி இருக்கிறார். இதனால் கமலை எப்படியாவது இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். ஆனால், இதற்கு கமல் பிடிகொடுக்கவில்லையாம். ஏற்கனவே கௌதமிக்கும் கமலுக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். அதனால் பாபநாசம் இரண்டாம் பாகத்தில் கௌதமி நடிப்பது சந்தேகம் என்பதால், ஒரிஜினல் திரிஷ்யம் படத்தில் நடித்த மீனாவையே வைத்து இரண்டாம் பாகத்தை எடுத்துவிடலாம் என்று ஸ்ரீபிரியா கமலிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம். ஆனால், திரிஷ்யம் 2 படம் Ottயில் வெளியானதால் இந்த படத்தை லாக்டவுனில் தமிழ் ரசிகர்களும் பார்த்துவிட்டனர். இதனால் இந்த படத்தை தமிழில் எடுத்தால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்காது என்று கமல் நினைக்கிறாராம் .