சந்திரமுகி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த சொர்ணமா இப்படி ஒரு கிளாமர் உடைகளில்.

0
4044
swarnam
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை நாயககிகளுக்கு நிகராக காமெடி காட்சியில் நடிக்கும் நடிகைகள் சிலர் ஒரே படத்தின் மூலம் பிரபலமடைந்துவிடுவார்கள். அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தில் ஸ்வர்ணம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் இவர். பி வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா போன்றவர்கள் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

-விளம்பரம்-

சந்திரமுகி படத்தில் வடிவேலுவின் காமெடி மிகப்பெரிய பலம் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் இந்த படத்தில் ரஜினியிடம் இருந்து தனது மனைவி ஸ்வர்ணத்தை காப்பாற்றுவது தான் வடிவேலுவின் பிராதன ரோலாக இருக்கும். இதே விஷயம் தான் படம் முழுதும் வடிவேலுவின் காமடியாக வரும் இந்த படத்தில் ஸ்வர்ணம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவரின் உண்மையான பெயரும் ஸ்வர்ணா தான்.

- Advertisement -

தமிழில் சரவணன் நடிப்பில் வெளியான ‘தாய் மனசு’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் மாயாபஸார், கோகுலத்தில் சீதை, பெரிய தம்பி என்று பல படங்களில் நடித்தார். நாயகி வாய்ப்பு குறையவே சினிமாவில் சிறு சிறு துணை கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், இந்தி, தெலுகு என்று பல மொழிகளில் நடித்துள்ளார்.

மேலும், தமிழில் மாயா மச்சிந்திரா, சதுரங்கம், தேமொழியால் என்று பல சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக நீயும் நானும் என்ற தமிழ் படத்தில் நடித்தார். அதன் பிறகு குடும்ப வாழ்கையில் செட்டில் ஆகி விட்டார். இணையத்தில் அவ்வப்போது தலை காட்டும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில், சமீபத்தில் இவர் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement