இந்த நடிகை வந்தால் நான் பிக் பாஸ் வரமாட்டேன்..! யார் தெரியுமா.? காரணம் இதுதான்

0
773

கடந்த ஆண்டு தெலுங்கில் ஓளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் நேற்று(ஜூன் 10) தொடங்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தை ஜூனியர் என் டி ஆர் தொகுத்து வழங்கிய நிலையில் , இரண்டாம் பாகத்தை நடிகர் நாணி தொகுத்து வழங்கி வருகிறார்.

sri reddy

இந்த நிகழ்ச்சியில் பிரபல தெலுகு நடிகை ஸ்ரீ ரெட்டி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் நேற்று நடைபெற்ற ஆரம்ப விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. இதற்கு காரணம் நடிகை ஸ்ரீ ரெட்டி வந்தால் நான் இந்த நிகழ்ச்சியில் பங்குப்பெற மாட்டேன் என்று நடிகர் நாணி தெரிவித்துள்ளாராம்.

இதற்கு முக்கிய காரணம் கடந்த மாதம், தெலுங்கு திரை உலகில் ஒரு சிறந்த அந்தஸ்தில் இருக்கும் நானியை பற்றி நடிகை ஸ்ரீ ரெட்டி தனது முக நூல் பக்கத்தில் சர்ச்சையான பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். ” நடிகர் நானி, நீஙகள் நன்றாக நடிக்கிறீர்கள் மேலும் பார்ப்பதற்கு இயற்கையாக இருக்கிறீர்கள் , அது வெறும் உங்கள் முகமூடி தான்.

bigg boss season 2

ஆனால் நிஜ வாழ்க்கையில் நீங்கள் நல்லவர் என்று நிரூபிக்க பல நடங்கங்களை போட்டு வருகிறீர்கள். நீங்கள் பல பெண்களிடம் நல்லவன் போல நடித்து அவர்களை சீரழித்துள்ளிர்கள் உங்களால் பல பெண்கள் பாதிக்க பட்டுள்ளனர். கண்டிப்பா இதற்காக கடவுள் உங்களை ஒரு நாள் தண்டிப்பார்” என்று பதிவிட்டிருந்தார்.

தற்போது நடிகர் நாணி, ஸ்ரீரெட்டி வந்தால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறியதை அறிந்த ஸ்ரீரெட்டி, தனது முகநூல் பக்கத்தில் ” நானி உன் குடும்பம் மற்றும் தொழில் மீது சத்தியமாக கூறு, நீ என்னிடம் தவறாக நடந்து கொள்ளவில்லையா ? ” என்று நானியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.