சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு சினிமா துறையில் உள்ளவர்கள் பட வாய்ப்புகள் தருவதாக சொல்லி தன்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று கூறி இருந்தார். பின் தெலுங்கு சினிமாவில் உள்ள சில பிரபலங்களின் பெயர்களை சொல்லி அவர்களுடன் ஒன்றாக இருக்கும் ஆதாரத்தையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார். இது பல டோலிவுட் பிரபலங்களின் வயிற்றில் புளியை கரைத்து. இந்த நடவடிக்கையால் ஆந்திராவில் நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து இவர் சென்னையில் குடியேறினார். பின் இவர் தமிழ் நாட்டையும் விட்டு வைக்கவில்லை. தமிழ் சினிமாவிலும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் பெயரை ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.
அதில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், லாரன்ஸ், ஸ்ரீகாந்த் போன்றவர்கள் பட வாய்ப்புகள் தருவதாக கூறி தன்னுடன் உடலுறவு மேற்கொண்டதாக குற்றம் சாட்டி இருந்தார். தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ள நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்து உள்ளார் ஹீரோக்கள் மட்டும் கிடையாது, அடிக்கடி நடிகைகள் குறித்தும் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வருகிறார் ஸ்ரீரெட்டி.
அந்த வகையில் சமீபத்தில் இவர், பிரபல நடிகை அமலா பால் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதவு ஒன்றை செய்துள்ளார். அதில், கவலைப்படாதே அமலாபால் உன்னுடைய பஞ்சாபி கணவர் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வார் நான் பஞ்சாபிகளை நம்புகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். திடீரென்று அமலா பால் குறித்து ஸ்ரீரெட்டி பதிவிட்டுள்ளதால் அமலா பால் என்ன பன்னாங்களோ என்ற குழப்பத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள். ஆனால், ஸ்ரீரெட்டி இப்படி பதிவிட்டதற்க்கு காரணமும் இருக்கிறது.
அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. 2014 ஆம் நடைபெற்ற இவர்களது திருமணம் மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்தனர். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் தான் இவர்கள் பிரிந்தனர் என்று கூறப்பட்டது. கடந்த சில காலமாகவே அமலாபால் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற சில செய்திகளும் கிசுகிசுக்கப்பட்டு வந்த வண்ணம் இருந்தது.
நடிகை அமலா பால் பிரபல பஞ்சாபை சேர்ந்த பாடகர் பவிந்தர் சிங் என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. பவிந்தர் சிங்கின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அமலா பாலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அடிக்கடி வைரலானது. மேலும், கடந்த மார்ச் 20 ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டதாக சில புகைப்படங்கள் வைரலானது. ஆனால், அந்த தகவலை அமலா பால் தரப்பினர் மறுத்துள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் ஸ்ரீரெட்டி அமலா பால் குறித்து இப்படி பத்விட்டுளளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.