பாலிவுடை போல தமிழ் சினிமாவிலும் பல்வேறு வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர். வகையில் நடிகை ஸ்ருதி ஹாசனும் ஒருவர். தமிழ்சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.
ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.இவர் 2000 வெளியான இவரது தந்தை கமல் ,பாலிவுட் நடிகர் ஷாருகான் ஆகிவோர் நடித்த ஹேராம் என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
சிறு வயது முதலே தாம் ஒரு பாப் சிங்கர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டுள்ள ஸ்ருதி பல பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.மேலும் தனது 6 வயதில் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடியுள்ளார் ஸ்ருதி ஹாசன். 7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதி.பூஜை, சிங்கம் 3 ,புலி, வேதாளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
அதற்கு முன்னர் 2009 இல் வெளியான லக் என்ற படத்தின் நடித்த மூலம் இந்தியிலும் கால் பதித்தார் ஸ்ருதி ஹாசன்.இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காணமுடியவில்லை. இருப்பினும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் உள்ளாடை தெரியும் அளவிற்கு மெல்லிய பேண்ட் ஒன்றை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.