சினிமா உலகில் வித்யாசமான கதைகளை எடுப்பதில் கைத்தேர்ந்தவர் இயக்குனர் மணிரத்னம். இவர் வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை படமாக்க பல வருடங்கள் போராடினார். தற்போது அவரின் கனவு நினைவாகி வருகிறது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் , அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அதோடு ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசை அமைத்து உள்ளார். மணிரத்னம் இயக்கிய பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது.
இந்த இரண்டு பாகத்தையும் மணிரத்னம் அவர்கள் தற்போது முடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக நடிகர் பாபு ஆண்டனி தற்போது அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகர் பாபு ஆண்டனி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் பாபு ஆண்டனி தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் பாருங்க : என்னோட க்ளோஸ் பிரண்டானா நீங்களே இப்படி பண்ணிடீங்களே – பிரசாந்தால் கைமாறிய படம் குறித்து ஹாஸ்பிடலில் புலம்பியுள்ள அஜித்.
மேலும், இந்த தகவலை நடிகர் பாபு ஆண்டனி தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, பொன்னியின் செல்வர் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் எனது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக எனக்கு இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான் வீடு திரும்பி விடுவேன். நிறைய சண்டை காட்சிகள் நிறைந்த படமாக பொன்னியின் செல்வன் படம் இருக்கிறது. எனக்கு காயம் ஏற்பட்டும் மணிரத்தினம் அவர்கள் தைரியமாக என்னை தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள அனுமதித்தார்.
அவர் மன்னிப்பு கேட்டு என்னை படத்திலிருந்து நீக்கி இருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. அவருக்கு இந்த தருணத்தில் நன்றி சொல்கிறேன். அதோடு நான் 3 முதல் 4 வாரங்களில் பழையபடி செயல்பட தொடங்கி விடுவேன். அதுமட்டும் இல்லாமல் 50 வருடங்களுக்கு பிறகு இரண்டாவது முறையாக மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டு இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.