சினிமாவில் பெண்களுக்கு டூப் போடும் ஆண் ஸ்டண்ட் மேன்.! இவர் தானா அது.!

0
9713
reema
- Advertisement -

சினிமா திரை உலகில் எடுக்கப்படும் சண்டைக்காட்சிகளும், மலையில் இருந்து கீழே குதிக்கும் சீன்களும் ஹீரோக்கள் மட்டும்தான் டூப் போடுவார்கள் என்று அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், நடிகைகளுக்கும் டூப் போடுகிறார்கள் என்ற சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது. நடிகைகளுக்கு எல்லாம் டூப் போடுவது நான்தான் என்று மனம் திறக்கிறார் நசீர். நான் ஒரு ஆண். ஆனால் பெண்கள் போடும் சண்டைக் காட்சிகள், மேலே இருந்து கீழே விழும் சீன்கள் போன்ற பலவற்றிற்கு பெண்கள் நடிக்க மாட்டார்கள்.

-விளம்பரம்-
Stunt Dupe Artist Nazeer

அவர்கள் வேடத்தில் நான் தான் அந்த சீன்களை எல்லாம் செய்வேன் என்று சொல்கிறார். நான் பெண்களைப்போல காஸ்டியூம் போட்டால் முழுமையாக பார்க்கவே பெண்ணை போல இருப்பேன். அவர்கள் நடை, உடை, பாவனைகள் எல்லாம் அவர்களிடமிருந்து உள்வாங்கிக்கொண்டு அவர்களைப்போலவே நடிப்பேன். சினிமா துறையில் புகழ் பெற்ற இயக்குனர் ஷங்கர், மணிரத்தனம்,கே.எஸ்.ரவிக்குமார் முதல் தற்போது புதிதாக அறிமுகமாகி வரும் இயக்குனர்கள் வரை அனைவரும் என்னுடைய கால்ஷீட்டுக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். நான் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளிலும் நடிக்கும் நடிகைகளுக்கு டூப் போடுகிறேன் என்று கூறினார்.

இதையும் பாருங்க : ஒருவேளை இந்த வாரம் வெளியேறும் நபர் கோல்டன் டிக்கெட்டை வென்றால் என்ன நடக்கும் தெரியுமா ?

- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன்னால் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் அணிந்த பல லட்சம் மதிப்புள்ள பட்டுப் புடவை என்னக்கும் ஒன்று வாங்கப்பட்டது. இந்த மாதிரி நடிகைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எனக்கும் சினிமாத்துறையில் கொடுக்கிறார்கள் என்று கூறினார். எனக்கு என ஒரு தனி கேரவன், பிராண்டட் மேக்கப் கலைஞர்கள் என அனைத்து வசதிகளையும் எனக்கு செய்து தருகிறார்கள் என்று கூறினார்.

Nazeer with colleagues

நான் இதுவரை ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, திரிஷா, சிம்ரன், ஜோதிகா, கோபிகா, பிரியாமணி, அசின், மல்லிகா ஷெராவத் போன்ற பல நடிகைகளுடன் டூப் போட்டு உள்ளேன். நான் இந்த டூப் போடும் பணி 17 ஆண்டுகளாக செய்து வருகிறேன் என்று கூறினார். என்னுடைய தொழில் சினிமாவில் ஸ்டண்ட் அதாவது சண்டை செய்வதுதான். நாளடைவில் நான் பெண்களுக்காக டூப் போடவும் ஆரம்பித்து விட்டேன் என்று கூறினார்.

-விளம்பரம்-
with Trisha

‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தில் அஞ்சு லேடி டூப்ஸ் டூப் போட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும்,படப்பிடிப்பிற்கு சென்று பின்னர் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் என்னை பார்த்ததும் நீதான் திரிஷாக்கு டூப் போட சொல்லி என்னை நடிக்க வாய்ப்பு தந்தார். அந்த படத்தில் குண்டு வெடிக்கும் காட்சியில் வெடித்ததும் ஆளுக்கு ஒரு பக்கமாக விழும் அந்த சீனில் த்ரிஷாவுக்கு பதிலாக நான் கீழே விழும் சின்.இது தான் எனக்கு முதல் டைம் கீழே விழும்போது தோள்பட்டையில் பயங்கரமா அடி விழுந்தது. ஆனா யார்கிட்டயும் அதை பத்தி சொல்லவே இல்ல. சில மாசம் என்ன ரொம்ப கஷ்டப்பட்டு ரெடி ஆனேன். அந்த முதல் படத்தின் மூலம் எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement