பிரபல நடிகை திடீர் மரணம் – தமிழ் ரசிகர்களுக்கு இவரை பீஸ்ட் மற்றும் கோல்கேட் விளம்பரம் மூலம் தான் தெரியும். உன்மையில் இவர் யார் தெரியுமா?

0
480
- Advertisement -

பீஸ்ட் பட பழம்பெரும் நடிகை சுபலட்சுமி காலமாகியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாள சினிமாவில் மிக பிரபலமான பழம்பெரும் நடிகையாக இருந்தவர் சுபலட்சுமி. இவர் மலையாளத்தில் கிட்டதட்ட 75 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் டப்பிங் குரல் கொடுப்பது, பாடுவது போன்ற பிற பன்முகங்களைக் கொண்டிருந்தார். அதோடு இவர் கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றவர். அது மட்டும் இல்லாமல் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக, இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பேரழகி தொடரில் நடித்து இருந்தார்.

- Advertisement -

சுபலட்சுமி நடித்த சீரியல்கள்:

பின் இவர் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிதாசன் காலனி என்ற சீரியலில் பாட்டி என்ற வேடத்தில் நடித்து இருந்தார். பெரும்பாலும், இவர் பாட்டி வேடத்தில் தான் நடித்து இருக்கிறார். மேலும், இவர் ரேடியோ ஆன்லைன் நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சில விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் கோல்கேட் விளம்பரம் மூலம் தமிழ் ரசிகர்கள் இவரை கவனித்து இருக்கலாம்.

சுபலட்சுமி நடித்த படங்கள்:

ஆனால், இவர் பீஸ்ட் படம் முன்பே தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட் கொடுத்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷாவின் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அதற்குப்பின் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த அம்மணி என்ற படத்திலும் இவர் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

பீஸ்ட் படத்தில் சுபலட்சுமி:

பின் கடந்த ஆண்டு இயக்குனர் நெல்சன் திலீப் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சுபலட்சுமி நடித்திருந்தார். இப்படி மீடியாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த சுபலட்சுமி இன்று காலமாகி இருக்கும் தகவல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சில தினங்களாகவே இவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது.

சுபலட்சுமி மறைவு:

இதனால் இவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையும் அளித்திருந்தார்கள். தற்போது இவருக்கு 87 வயதாகிறது. வயது மூப்பு காரணமாக தான் இவர் நேற்று இரவு இறந்திருக்கிறார். இவருடைய இறப்பு மலையாள திரை உலகில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமா உலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவருடைய மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலருமே அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement