2.நடிகை மோனால்:
சிம்ரனின் தங்கையான இவர் அவரைப் போலவே தமிழில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். ஆனால், திடீரென தற்கொலை செய்துகொண்ட இவர், அதற்கான காரணமாக எழுதி வைத்து 'தன் வாழ்க்கையில் நல்ல ஆண்களையே பார்க்கவில்லை' என்பது தான்.
3.நடிகை பிரதியுஷா:
இவர் ஜூஸில் விஷம் கலந்து பொது இடத்தில் காருக்குள்ளேயே அமர்ந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரும் இவருடைய காதலரும் தற்கொலை செய்து கொள்ள திட்டம் தீட்டினார். அதிர்ஷ்ட்டவசமாக அவரது காதலர் உயிர் தப்பினார்.
4.ஜெயலட்சுமி:
எம்.ஜி.ஆர் காலத்து நடிகையான இவர் தனது உடல் நலக் குறைவாள் மிக இளம் வயதிலேயே இறந்து போனார்.
5.திவ்யபாரதி:
மிக மிக இளம் வயதிலேயே தென்னிந்திய படங்களில் துவங்கி பாலிவுட் வரை மிக வேகமாக வளர்ந்தவர் இவர். திடீரென தனது மும்பையில் ஒரு அபார்ட்மெண்ட்டில் மர்மமான முறையில் இறந்த கிடந்தார். இறந்த போது அவருக்கு வயது 19.
6.நடிகை சபர்ணா:
சென்னை மதுரவாயில் பக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் இறந்து போனார். இன்னும் அவரது கேஸ் நடைபெற்று வருகிறது.






