தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றி நடிகை சுகன்யா அளித்து இருந்த பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சுகன்யா. இவருடைய இயற்பெயர் ஆர்த்தி தேவி. இவர் தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு “புது நெல்லு புது நாத்து ” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் சின்னகவுண்டர், கோட்டைவாசல், செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், கருப்பு வெள்ளை, தாலாட்டு, கேப்டன், வண்டிச்சோலை சின்ராசு, மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ், மகாபிரபு போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார்.

அதிலும் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இந்தியன் படத்தில் சுகன்யா வயதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் இவரை எல்லோரும் லேடி கமல் என்று பெயர் வைத்து அழைத்திருந்தார்கள். இந்த படம் இவருக்கு நல்ல பெயர் வாங்கி தந்தது. மேலும், இவர் கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று பல முன்னனி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்து இருந்தார்.
சுகன்யாவின் திரைப்பயணம்:
அதோடு இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருந்தார். நடிப்பையும் தாண்டி நடிகை சுகன்யாவிற்கு பரதநாட்டிய கலை மீது மிகுந்த ஆர்வமும் உண்டு. நடிகை சுகன்யா அவர்கள் திரைக்கு வருவதற்கு முன்பு பொதிகை தொலைக்காட்சியில் பெப்ஸி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி இருந்தார். அதன் பிறகு சன் டிவியில் அந்த நிகழ்ச்சியை உமா தொகுத்து வழங்கி இருந்தார்.

சுகன்யா பற்றிய தகவல்:
அதோடு இவர் அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழாவிலும் பக்தி ஆல்பங்களை வெளியிட்டு இருக்கிறார். பின் இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தனது நடிப்புத் திறமைக்காக பல முறை பிலிம்பேர் விருதுகளை வாங்கியிருக்கிறார். இப்படி சினிமா உலகில் உச்சத்தில் இருந்த நடிகை சுகன்யா அவர்கள் 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதரன் ராஜ கோபலன் என்பவரை திருமணம் செய்து இருந்தார். ஆனால், திருமணமான ஓராண்டிலேயே சுகன்யா விவாகரத்து கோரி நீதி மன்றத்தை நாடினார்.
https://www.youtube.com/watch?v=gGgEfrPn7Y8
சுகன்யா பேட்டி:
பின் 2004 ஆம் ஆண்டு சுகன்யா விவாகரத்து பெற்றார். தற்போது சுகன்யா தன் மகளுடன் இருக்கிறார். இந்நிலையில் இது குறித்து அளித்த பேட்டியில் சுகன்யா, ஒரு பெண் விவாகரத்து முடிந்து அம்மா வீட்டுக்கு திரும்பி வந்தாள் நாலு பேர் என்ன சொல்லுவாங்க என்று இந்த சமூகத்தை பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. உங்கள் மனசாட்சிக்கு மட்டும் பயந்தால் போதும். திருமண வாழ்க்கை சரியில்லை என்றால் அந்த வாழ்க்கையை விட்டு வெளியில் வந்து விடுங்கள். திருமண வாழ்க்கையில் நடக்கிற குடும்ப வன்முறைகளை ஓரளவுக்கு தான் சகித்துக் கொள்ள முடியும். முடியாத பட்சத்தில் வெளியில் வருவது தான் பெண்களுக்கு பாதுகாப்பு.

விவாகரத்து பற்றி சொன்னது:
இதனால் பெண்கள் முடங்கிப் போகக்கூடாது. அதேபோல் ஒரு போட்டோவை பார்த்து பலரும் என் பொண்ணு என்று நினைத்து இருக்கிறார்கள். நானும் என் அக்கா பொண்ணும் என்று சொல்லித்தான் அந்த போட்டோவை என் சோஷியல் மீடியாவில் ஷேர் பண்ணியிருந்தேன். அதையும் மீறி அவளை என் பொண்ணுன்னு வதந்தி பரப்பினால் நான் என்ன செய்யுறது? என் கல்யாண வாழ்க்கை ஒரு வருஷம்கூட நீடிக்கலை. இதை நான் வெளிப்படையாக சொல்லியிருக்கேன். இதுக்கு மேலயும் எனக்கு ஒரு குழந்தை இருக்கு என்று சொல்றவங்களை நினைத்தால் வருத்தமாக இருக்கு என்று கூறி இருந்தார்.






