சிறு வயதில் 4 வருடங்கள் தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை சுனைனா ..!

0
1055
sunaina
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது பல்வேறு பிரபலங்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து #metooவில் தெரிவித்து வரும் நிலையில் பிரபல நடிகை சுனைனா தனக்கு சிறு வயதில் நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார்.தமிழில் ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதன் பின்னர் பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார்.

sunaina

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை சுனைனாவிடம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் மீ டூ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தனக்கு ஏற்பட்ட திடுக்கிடும் சில மீ டூ அனுபவங்களை நடிகை சுனைனா தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய நடிகை சுனைனா, எனக்கு 12 வயது இருக்கும் போது நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது தினமும் ஆட்டோவில் தான் பள்ளிக்கு சென்று வருவேன். அந்த ஆட்டோ ஓட்டுநர் எப்போதும் அவரது இருக்கைக்கு அருகில் தான் என்னை அமர்த்தி வைத்துக்கொள்வார்.

-விளம்பரம்-

ஆட்டோவில் செல்லும் போது அந்த ஓட்டுனர் என்னிடம் வெளியே சொல்ல முடியாத விஷயங்களை எல்லாம் செய்வார். எனக்கு அப்போது சிறு வயது என்பதால் அவர் என்ன செய்கிறார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.இப்படியே நான் பத்தாம் வகுப்பு செல்லும் வரை அவர் என்னை

இது போல பலாத்காரம் செய்து கொண்டே இருந்தார்.எனக்கு விவரம் தெரிந்த பின்னரே அவர் என்னிடம் என்ன செய்தார் என்பதை நான் உணர்ந்தேன். இதை நான் வீட்டிலும் சொல்லவில்லை தற்போது அந்த ஆட்டோ ஓட்டுனரை நான் தேடிக்கொண்டிருக்கிறேன். அவரை கண்டுபிடித்தால் கண்டிப்பாக அவரை போலீசிடம் தான் ஒப்படைப்பேன் என்று கூறியுள்ளார் நடிகை சுனைனா.

Advertisement