தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் ஷங்கர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிவாஜி படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரேயா, சுமன், விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் சிவாஜி படத்தில் காட்டப்படாத காட்சி தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அந்த காட்சியில் சுனைனா நடித்துள்ளார்.
சிவாஜி படத்தில் நடிகை சுனைனாவை ரஜினி, விவேக் இருவரும் சேர்ந்து பெண் பார்க்கும் ஒரு காட்சியில் நடித்துள்ளார். ஆனால், அந்த காட்சி படத்தில் காட்ட வில்லை. தற்போது அந்த காட்சி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழில் 2008ம் ஆண்டு நடிகர் நகுல் அறிமுகமான காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சுனைனா.
பின்னர் இவர் மாசிலாமணி, வம்சம், சமர்,தெறி போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும், ‘நிலா நிலா ஓடி வா ‘ என்ற வலைதள தொடரிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த சில்லுக்கருப்பட்டி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் குஷ்பூ,மீனா,கீர்த்தி சுரேஷ் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.