அட, சுனைனாவா இது. என்ன இப்படி பப்லியா இருக்காரு. அவரே வெளியிட்ட புகைப்படம்.

0
13399
sunaina
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகை சுனைனா. தமிழில் நடிகர் நகுல் நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சுனைனா. இதனை தொடர்ந்து இவர் மாசிலாமணி, வம்சம், சமர், யாதுமாகி, தெறி, காளி, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்து உள்ளார். ஆனால், இவரால் முன்னணி நடிகையாக தான் வலம் வர முடியவில்லை.

View this post on Instagram

14 ? the EXTREMELY awkward phase

A post shared by Sunainaa (@thesunainaa) on

சமீபத்தில் இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளிவந்த “சில்லுக் கருப்பட்டி” என்ற படத்தில் நடிகை சுனைனா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அவருடைய கதாபாத்திரத்தை பார்த்து பலரும் பாராட்டி உள்ளார்கள். தற்போது ட்ரிப், எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த ட்ரிப் படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இந்த ட்ரிப் படத்தை ஜூலை மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நடிகை சுனைனாவும், நடிகர் கிருஷ்ணாவும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அறிமுக இயக்குனர் ஜெய் கிருஷ்ணா இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான்.

இந்த வன்மம் படத்தில் சுனைனா,கிருஷ்ணா இருவரும் இணைந்து நடித்து உள்ளனர். இவர்களுடன் இந்த படத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது கிருஷ்ணாவும், சுனைனாவும் காதலிப்பதாக கூறப்பட்டது.

-விளம்பரம்-

மேலும், சுனைனாவும், கிருஷ்ணாவும் நீண்ட காலங்களாக காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை கிருஷ்ணா — சுனைனா இருவரும் வாய் திறந்தால் மட்டுமே தெரியும். இந்த நிலையில் நடிகை சுனைனா தனது 14 வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் பார்ப்பதற்கு கொழுக் மொழுக் என பப்லியான தோற்றத்தில் இருக்கிறார் சுனைனா.

Advertisement