சுனைனாவா இப்படி கிளாமர் உடையில் – வைரலாகும் அவரின் Throwback புகைப்படம்.

0
4933
sunaina
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகை சுனைனா. தமிழில் நடிகர் நகுல் நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சுனைனா. இதனை தொடர்ந்து இவர் மாசிலாமணி, வம்சம், சமர், யாதுமாகி, தெறி, காளி, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்து உள்ளார். ஆனால், இவரால் முன்னணி நடிகையாக தான் வலம் வர முடியவில்லை.

-விளம்பரம்-

இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளிவந்த “சில்லுக் கருப்பட்டி” என்ற படத்தில் நடிகை சுனைனா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அவருடைய கதாபாத்திரத்தை பார்த்து பலரும் பாராட்டிஇருந்தனர். அதை தொடர்ந்து ட்ரிப் படத்தில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை.

- Advertisement -

தற்போது எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த ட்ரிப் படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை சுனைனாவும், நடிகர் கிருஷ்ணாவும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கிருஷ்ணாவும் நீண்ட காலங்களாக காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால், இந்த தகவலை இருவரும் மறுத்தனர். சமீபத்தில் நடிகை சுனைனா தனது 14 வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். அதில் பார்ப்பதற்கு கொழுக் மொழுக் என பப்லியான தோற்றத்தில் இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் எடுத்த சில கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வளைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement