வாங்கிய முழு சம்பளத்தை முழுசாக வாரி இறைத்த சன்னி லியோன். குவியும் பாராட்டு.

0
3017
Sunny-Loeone
- Advertisement -

ஹாலிவுட்டில் ஆபாச நடிகையாக வலம் வந்த சன்னி லியோன் அவர்கள் தற்போது பாலிவுட் பட நாயகியாக வலம் வருகிறார். ஆபாச நடிகையாக இருந்த சன்னி லியோன் ஒரு கட்டத்தில் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக திகழ்ந்து வருகிறார். முதலில் ஹிந்தி மொழி படங்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன பின்னர் சன்னி லியோன் அவர்கள் இரண்டு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவர் தென்னிந்திய மொழி படங்களில் அதிகம் நடிக்க வில்லை என்றாலும் தென்னிந்திய ரசிகர்களை அதிகம் ஈர்த்து உள்ளார் சன்னி.

-விளம்பரம்-
Image result for sunny leone

- Advertisement -

இவருக்கு இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் நடிகை சன்னி லியோன் அவர்கள் தன்னுடைய முழு சம்பளத்தையும் அனாதை இல்லத்திற்கு கொடுத்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சன்னி லியோன் அவர்கள் தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்க்கு முன் சன்னி லியோன் அவர்கள் தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருந்தார். சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

இந்த பாடல் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போல் ரங்கீலா என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார். இப்படி தமிழ்,மலையாளம்,தெலுங்கு மொழி படங்களில் நாயகியாக வலம் வரப் போகிறார் நடிகை சன்னி லியோன். அதுமட்டும் இல்லாமல் தற்போது ஹிந்தியில் ஒரு வெப் தொடர் ஒன்றில் நடித்து உள்ளார். இந்த தொடர் முழுக்க முழுக்க காமெடி தொடர் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Image result for sunny leone web series

மேலும், இந்த தொடரில் நடித்ததன் மூலம் தனக்கு கிடைத்த சம்பளத்தை முழுவதையும் சன்னி லியோன் அவர்கள் மும்பையில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு நன்கொடையாக கொடுத்து உள்ளார் சன்னி லியோன். சன்னி லியோன் அவர்களின் இந்த செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் சன்னி லியோனுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement