‘சன்னி லியோன் பான் கார்டை பயன்படுத்தி ஆன்லைன் மோசடி – ஏமாந்த சன்னி லியோன்’ எவ்வளவு பணம் தெரியுமா?

0
370
- Advertisement -

இந்தியாவில் சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் தொழிலாளர்கள், திரைப்பட பிரபலங்கள் தொடங்கி சாதாரண நடுத்தர குடும்பத்தினர் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பல பேர் தற்கொலையும் செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சன்னி லியோனும் ஆன்லைன் மோசடிக்கு ஆளாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஹாலிவுட்டில் பாலியல் ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் சன்னி லியோன்.

-விளம்பரம்-

இவருக்கு என்று உலகம் முழுவதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பின்னர் இவர் திரைப்படங்களில் நடிகையாக நடித்து வருகிறார். தற்போது இவர் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஹிந்தி, தமிழ், மலையாளம் என்று பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு சன்னி லியோன் நடனமாடியிருந்தார்.

- Advertisement -

சன்னிலியோன் நடித்த படங்கள்:

அதன் பின்னர் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை சன்னி லியோனின் மியூசிக் ஆல்பம் ஒன்று வெளியாகி இருந்தது. இந்த பாடல் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. நடிகை சன்னி லியோன் மற்றும் கனிகா கபூர் ஆகியோர் இணைந்து Madhuban mein Radhika என்ற ஒரு ஆல்பம் பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்கள். இந்த பாடலில் நடிகை சன்னி லியோன் மிக கவர்ச்சிகரமான நடனத்தை ஆடி இருக்கிறார்.

சர்ச்சையான சன்னிலியோன் பாடல்:

இந்தப்பாடல் வெளியானதிலிருந்து சோசியல் மீடியாவில் கடுமையான எதிர்ப்பு வந்து கொண்டிருக்கின்றது. இதனால் ஆபாச நடிகை சன்னி லியோனை கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பலரும் பதிவிட்டு இருந்தார்கள். அதே போல மத்திய பிரதேச அமைச்சர் நரோதம் மிஸ்ரா அவர்கள் சன்னிலியோனுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்த சம்பவம் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது நடிகை சன்னி லியோன் ஆன்லைன் மோசடிக்கு ஆளாகியுள்ளார். அதுஎன்னவென்றால்,

-விளம்பரம்-

சன்னிலியோனின் ஆன்லைன் மோசடி:

இவரின் பான் கார்டு எண்ணை மர்ம நபர் ஒருவர் பயன்படுத்தி ஆன்லைனில் பிரபல நிறுவனம் மூலம் 2000 ரூபாய் கடன் பெற்றுள்ளார். இந்த தகவலை தற்போது சன்னிலியோன் தனது சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்து இருக்கிறார். இதில் அவர் கூறியிருப்பது, சில முட்டாள்கள் என்னுடைய பான் கார்டு எண்ணை பயன்படுத்தி 2000 ரூபாய் கடன் பெற்று இருக்கிறார்கள். இதனால் எனது சிபில் ஸ்கோர் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து எனக்கு எந்த ஒரு உதவியும் வழங்கப்படவில்லை. இது ஏன் என்று எனக்கு புரியவில்லை? என்று கூறி இருக்கிறார்.

வைரலாகும் சன்னிலியோன் பதிவு:

இப்படி சன்னி லியோன் பதிவிட்ட பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் இந்த ட்விட்டை சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றனர். இதனை அடுத்து இந்த பிரச்சனை தற்போது சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் சன்னிலியோன் பகிர்ந்து கூறியிருப்பது, இந்த பிரச்சினையை விரைவில் சரி செய்வதாக உறுதி அளித்து இருக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நன்றி, இதை வைரலாக்கிய ரசிகர்களுக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement