தன்னைவிட 15 வயது குறைவான இளைஞரை திருமணம்? தொழிலதிபர் உடன் டேட்டிங்? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சுஷ்மிதா சென்

0
279
- Advertisement -

தன்னை பற்றி சோசியல் மீடியாவில் பரவிய வதந்திகளுக்கு சுஷ்மிதா சென் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சுஷ்மிதா சென். இவருடைய தந்தை இந்திய விமானப்படை கமாண்டர், தாயார் ஒரு பேஷன் கலைஞராகவும், நகை வடிவமைப்பாளராகவும் இருந்தவர். சுஷ்மிதா சென் தன்னுடைய கேரியரை மாடலிங்கில் தொடங்கினார்.

-விளம்பரம்-

பின் யுனிவர்சல் அழகி(பிரபஞ்ச அழகி) என்ற பட்டத்தை 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்தியாவிற்கு வாங்கி தந்தவர் சுஷ்மிதா சென். அதற்கு முன்பு இவர் மிஸ் இந்தியா என்ற பட்டம் வென்றார். இப்போட்டியில் ஐஸ்வர்யா ராயைத் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய 18 வயதில் அழகி பட்டம் பெற்றவர். இதற்கு பிறகு தான் இவர் சினிமா உலகில் நடிக்க ஆரம்பித்தார். இவர் 1996 ஆம் ஆண்டு ‘தஸ்தக்’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

- Advertisement -

சுஸ்மிதா சென்னின் திரைப்பயணம்:

அதனை தொடர்ந்து இவர் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ரட்சகன்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படம் பெரிய அளவிற்கு வெற்றியை கொடுத்தது. அதற்கு பிறகு இவருக்கு தமிழில் படங்கள் சரியாக அமையவில்லை என்றவுடன் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். இவர் பாலிவுட்டில் நிறைய படங்களில் நடித்தார். பின் இவர் பல வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘Taali’ என்ற படத்தில் சுஷ்மிதா சென் நடித்திருந்தார்.

சுஸ்மிதா தனிப்பட்ட வாழ்க்கை:

இந்த படம் மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் திருநங்கைகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் கௌரி சாவந்த் என்பவருடைய வாழ்க்கை வரலாற்று படம். இந்த படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதற்கிடையில் இவர் இவர் 2000ம் ஆண்டில் ரெனீ என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார். அதன் பின் 2010 அன்று அலிசா என்ற மூன்று மாத பெண் குழந்தையை தத்தெடுத்தார். அதுமட்டுமில்லாமல் தற்போது சுஸ்மிதாவுக்கு 48 வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லை இருந்தும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். இந்த நிலையில் இவர் ஏழு வருடங்களுக்கு முன்பு ரோமன் ஷால் என்பவருடன் டேட்டிங்கில் இருந்தார்.

-விளம்பரம்-

சுஸ்மிதா சென் குறித்த சர்ச்சை:

சுஸ்மிதாவை விட 15 வயது குறைந்தவர் ரோமன் ஷால். அதற்குப் பின் இவர்கள் இருவரும் பிரிந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. அதற்கு பின் சில மாதங்களுக்கு முன்பு நிதி மோசடியில் சிக்கிய தொழிலதிபர் மற்றும் ஐபிஎல் முன்னாள் தலைவருமான லலித் மோடி உடன் சுஷ்மிதா சென் லண்டனில் இருக்கும் போது எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார். இருவருமே லிவிங் ரிலேஷனில் இருப்பதாக பரவியிருந்தது. இதற்கு சுஷ்மிதா, தன்னுடைய இரண்டு மகள்கள் உடன் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு, நான் சந்தோஷமாக ஒரு இடத்தில் இருக்கிறேன். நான் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பதிவிட்டு இருந்தார்.

சுஸ்மிதா பேட்டி:

மேலும், இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் சுஸ்மிதா, நான் ஐந்து ஆண்டாக ஒருவருடன் காதலில் இருந்தேன். அதற்கு பின் அதை முடித்துக் கொண்டோம். பரஸ்பரமாக நாங்கள் இருவருமே பிரிந்து விட்டோம். இப்போது நான் யாருடனும் ரிலேஷன்ஷிப்பில் இல்லை. நிம்மதியாக சிங்கிளாக நான் என்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். எனக்கு யாருடைய துணையும் தேவையில்லை. நான் தனிமையாக இருப்பதை உணர்ந்ததால் நண்பர்களுடன் பழகுகிறேன். அவர்களுடன் ஜாலியாக சுற்றுலா செல்கிறேன். வாழ்நாள் முழுவதும் என் குழந்தைகளுடன் சிங்கிளாக என்னுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து விடுவேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement