கணவரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்வாதி. விவாகரத்து காரணமா ? அவரே வெளியிட்ட வீடியோ.

0
46411
swati
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகை சுவாதி. இவர் தமிழில் இயக்குனர் சசி குமார் இயக்கத்தில் 2008 ஆண்டு வெளியான ‘சுப்ரமணியபுரம் ‘ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் சுவாதி. அந்த படத்திற்கு நடிகை தமிழில் இதற்கு தானே ஆசைபட்டாய் பாலா குமாரா, வடகறி, யட்சன்,கனிமொழி, போராளி, யாக்கை போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
Yes, I am getting married: Swathi Reddy | Telugu Movie News ...

நடிகை ஸ்வாதி ரெட்டி அவர்கள் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பின்னணி பாடகி என பல முகங்களை கொண்டவர். மேலும், இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெங்லுகு, மலையாளம் என்று பல மொழி படங்களில் நடித்து வந்தார். இருந்தாலும் நடிகை ஸ்வாதி ரெட்டிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.

இதையும் பாருங்க : இளசுகளை ஈர்க்க பிகில் நடிகை கிளாமருக்கு இவங்க, வம்பிழுக்க இவங்க. இது தான் பிக் பாஸ் 4 லிஸ்டா?

- Advertisement -

பின் இவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நடிகை ஸ்வாதி அவர்கள் இந்தோனேசியாவை சேர்ந்த விகாஸ் என்ற நபரை தான் திருமணம் செய்து கொண்டார். விகாஸ் அவர்கள் ஏர்லைன்ஸ்ஸில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு அவர் ஒரே ஒரு மலையாள படத்தில் மட்டும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பிறகு இவர் படங்களில் நடிப்பதற்கு முழுக்கு போட்டு விட்டார். இந்நிலையில் நடிகை சுவாதிக்கும் அவரது கணவருக்கும் இடையே விவாகரத்து ஏற்பட உள்ளதாக சோசியல் மீடியாவில் வதந்தி கிளம்பியது. இதற்கு நடிகை சுவாதி தற்போது முற்றுப்புள்ளி வைத்து உள்ளார். எப்போதும் நடிகை சுவாதி அவர்கள் தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இதையும் பாருங்க : அசின் நடித்த முதல் படத்தில் நடித்துள்ள பார்த்திபன். இதோ அவர் நடித்த காட்சியின் அறிய வீடியோ.

-விளம்பரம்-

ஆனால், சமீப காலமாக இவருடைய செயல்களில் சின்ன மாறுதல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகை சுவாதி அவர்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்ட தனது கணவர் புகைப்படங்களை எல்லாம் டெலீட் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். பின் ரசிகர்கள் நடிகை சுவாதி கூடிய விரைவில் விவகாரத்து செய்யப் போகிறார் என்ற செய்தியைச் சோசியல் மீடியாவில் பரப்பி விட்டு உள்ளனர். இதை பார்த்ததும் நடிகை சுவாதிக்கு தூக்கிவாரிப் போட்டது. உடனடியாக அந்த செய்திக்கு சுவாதி அவர்கள் பதில் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது, கணவருடன் தான் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை மற்றவர்கள் யாரும் பார்க்காதபடி மறைத்து வைத்திருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவரது இன்ஸ்டாகிராம் ஆர்கீவ்ஸ் பகுதியில் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் உள்ளன. அதை ஸ்வாதியைத் தவிர மற்றவர்களால் பார்க்க முடியாது. தற்போது ஸ்வாதி வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவால் சோசியல் மீடியாவில் வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. எப்போதுமே ரசிகர்கள் சின்ன விஷயத்தையும் ஊதி ஊதி பெரிதாக்கி விடுகின்றனர். இதனால் சுவாதி குடும்பத்தில் பெரிய பூகம்பமே ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement