நடிகைகளை இப்படி தான் தேர்வு செய்கிறார்கள் என்று நடிகை டாப்ஸி பன்னு கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டு இருக்கிறார் டாப்ஸி பன்னு. இவர் சினிமா துறையில் நுழையும் முன் மாடலிங் துறையில் பணியாற்றி இருந்தார். அதன் பிறகு இவர் 2010 இல் சும்மாண்டி நாதம் என்னும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையில் நுழைந்தார்.
அதன் பின் இவர் தமிழில் 2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்து இருந்தது. அதை தொடர்ந்து நடிகை டாப்சி அவர்கள் தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
டாப்ஸி குறித்த தகவல்:
பின் இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் பாலிவுட்டில் நடிக்க சென்றார். அதோடு சில ஆண்டுகளாக இவர் பாலிவுட்டிலேயே அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தமிழில் லீட் ரோலில் வலம் வர முடியவில்லை என்றாலும், இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அதோடு சமீப காலமாகவே நடிகை டாப்ஸி அவர்கள் நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
டாப்ஸி நடித்த படங்கள்:
அந்த வகையில் இவர் நடித்த பிங், கேம் ஓவர், ஹஸீனா தில்ருபா, மன்மர்ஸியான் போன்ற படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த டன்கி மற்றும் ஜுட்வா 2 போன்ற படங்கள் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்காக இவர் நிறைய சம்பளம் வாங்கியிருந்ததாக சோசியல் மீடியாவில் செய்தி பரவி வந்தது.
இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை டாப்ஸி, நான் டன்கி மற்றும் ஜுட்வா 2
போன்ற படங்களுக்கு நிறைய சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது.
டாப்ஸி பேட்டி:
அதுமட்டும் இல்லாமல் பணத்திற்காக தான் நான் அந்த படங்களில் நடித்தேன் என்றும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மை கிடையாது. அந்த படங்களுக்கு நான் சம்பளம் அதிகம் வாங்கவில்லை. மேலும், தங்களின் படத்தில் நடிக்கும் நடிகைகள் எல்லாம் நடிகர்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அதில் சிலர், ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒருவரையும், அதிக பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்க்கும் ஒருவரையும் நடிக்க வைக்க விரும்புவார்கள்.
டாப்ஸி திருமணம்:
சிலர் தங்களை விட சிறிய வயது நடிகைகளை நடிக்க வைப்ப நினைப்பார்கள் என்று கூறி இருந்தார். இப்படி இவர் கூறியிருந்தது தான் சோசியல் மீடியாவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையில் நீண்ட நாள் காதலரான மத்தியாஸ் போ என்பவரை டாப்ஸி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண விழாவிற்கு குடும்ப உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டிருந்தார்கள். திருமணத்திற்கு பிறகும் டாப்ஸி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.