சத்தமே இல்லாமல் தனது நீண்ட நாள் காதலரை கரம் பிடித்த நடிகை டாப்ஸி பண்ணு- ஷாக்கில் ரசிகர்கள்

0
687
- Advertisement -

தனது நீண்ட கால காதலரை சத்தம் இல்லாமல் டாப்ஸி திருமணம் செய்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டு இருக்கிறார் டாப்ஸி பன்னு. இவர் பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர். சினிமா துறையில் நுழையும் முன் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி இருந்தார். அதன் பிறகு இவர் 2010 இல் சும்மாண்டி நாதம் என்னும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையில் நுழைந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழில் 2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்து இருந்தார். அதை தொடர்ந்து நடிகை டாப்சி அவர்கள் தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

டாப்ஸி குறித்த தகவல்:

பின் இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் பாலிவுட்டில் நடிக்க சென்றார்.
அதோடு சில ஆண்டுகளாக இவர் பாலிவுட்டிலேயே அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தமிழில் லீட் ரோலில் வலம் வர முடியவில்லை என்றாலும், இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அதோடு சமீப காலமாகவே நடிகை டாப்ஸி அவர்கள் நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

டாப்ஸி நடித்த படங்கள்:

அந்த வகையில் இவர் நடித்த பிங், கேம் ஓவர், ஹஸீனா தில்ருபா, மன்மர்ஸியான் போன்ற படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சமீபத்தில் இவருடைய நடிப்பில் ஹிந்தியில் வெளியாகியிருந்த படம் டங்கி. இந்த படத்தில் ஷாருக்கான் நடித்திருந்தார். இதனை அடுத்தும் இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் நீண்ட நாள் காதலரை டாப்ஸி கரம் பிடித்திருக்கும் தகவல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

டாப்ஸி காதலர்:

அதாவது, கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற பேட்மிட்டன் பிரீமியர் லீக் ஆட்டத்தின் போது டாப்ஸி அவர்கள் பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவரை சந்தித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் நட்பாக பழக தொடங்கினார்கள். பின் இவர்கள் நட்பு காதலாக மாறியது. இருந்தாலும், இதை வெளிப்படையாக டாப்ஸி சொல்லவில்லை. சமீபத்தில் தான் இவர் சோசியல் மீடியாவில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறியிருந்தார்.

டாப்ஸி திருமணம்:

இந்த நிலையில் கடந்த வாரம் தான் இவர்களுடைய ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது. பின் உதய்பூரில் டாப்ஸி – மத்தியாஸ் உடைய திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு குடும்ப உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டிருந்தார்கள். சத்தமே இல்லாமல் டாப்ஸி திருமணம் செய்து கொண்டது பலருக்குமே ஷாக் கொடுத்திருக்கிறது. மேலும், இவருடைய திருமணத்தில் கோலிவுட், பாலிவூட் பிரபலங்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய திருமண புகைப்படங்கள் கூட ஒன்று கூட வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement