ஒரு நொடியில் சிதைந்த எம்ஜிஆர்,சின்னப்ப தேவரின் பல ஆண்டுகால நட்பு- இது தான் காரணம்

0
240
- Advertisement -

ஒரு நொடியிலேயே எம்ஜிஆர்- சின்னப்ப தேவரின் பல ஆண்டு கால நட்பு சிதைந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரை உலகில் பழம்பெரும் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் எம்ஜிஆர். இவர் நடிகர் என்பதைவிட தமிழ்நாட்டின் முதல்வர் என்று சொல்லலாம். இவரை பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. மேலும், இவர் சினிமாவில் மட்டுமில்லாமல் அரசியலிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். இவ்வுலகை விட்டு எம் ஜி ஆர் மறைந்தாலும் இவருடைய புகழ் இன்னும் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த நிலையில் எம்ஜிஆர்- சின்னப்ப தேவர் நட்பு குறித்த தகவலை பற்றி தான் பார்க்கப் போகிறோம். சினிமா உலகில் நுழைந்த ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆரும், சின்னப்ப தேவரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அதே போல் தான் எம் ஜி ஆர் தான் நடிக்கும் படங்களில் சின்னப்ப தேவருக்கு ஏதாவது கதாபாத்திரம் இருக்கிறதா? என்று கேட்டு உடனே அவரை புக் செய்து விடுவார். அந்த அளவிற்கு இருவருக்கும் இடையே நட்பு இருந்தது. ஒருவேளை சின்னப்ப தேவருக்கு கதாபாத்திர இல்லை என்றாலும் அவருக்காகவே ஒரு காட்சியை உருவாக்க சொல்லி வாய்ப்பையும் கொடுத்து விடுவார்.

- Advertisement -

எம்ஜிஆர்- சின்னப்ப தேவர் நட்பு:

இப்படி எம்ஜிஆர்- சின்னப்ப தேவர் இருவரும் இணைந்து இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சின்னப்ப தேவர் சொந்தமாக படம் தயாரிக்க ஆசைப்பட்டார். இதனால் இவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அதன் மூலம் அவர் நல்லதங்கால் என்ற ஒரு படத்தை தயாரித்தார். ஆனால், துரதிஷ்டவசமாக அந்த படம் வெற்றியடையவில்லை. அதனை அடுத்து இவர் கடன் வாங்கி ஒரு படத்தை தயாரித்தார். அந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சின்னப்ப தேவர் நடித்திருந்தார். ஆனால், அந்த படமும் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றி பெறவில்லை.

சின்னப்ப தேவர் திரைப்பயணம்:

இப்படி இவர் இரண்டு படமே தோல்வி அடைந்ததால் படம் எடுக்கும் ஆசையிலிருந்து சின்னப்ப தேவர் பின்வாங்கி விட்டார். அதற்குப் பிறகு எம்ஜிஆர் இடம் நேராக சென்று கால்ஷீட் கேட்டு இருக்கிறார்.
அதற்கு எம்ஜிஆர், நான் உங்கள் படத்தில் நடிப்பதாக விளம்பரம் கொடுத்துவிட்டு என்னை சந்தித்திருக்கலாம். யார் யாருக்கோ நடித்துக் கொடுக்கிறேன்? உங்களுக்கு நடித்துக் கொடுக்க மாட்டேனா, கண்டிப்பாக நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறியிருந்தார். அதற்கு பிறகு தான் தேவர் ஃபிலிம்ஸ் என்ற பெயரில் சின்னப்ப தேவர் தனியாக பட நிறுவனம் தொடங்கினார்.

-விளம்பரம்-

எம்ஜிஆர் செய்த உதவி:

இந்த படத்தை சின்னப்ப தேவரின் தம்பி எம்.ஏ திருமுருகன் இயக்கி இருந்தார். எம்ஜிஆருக்கு ஜோடியாக பானுமதி நடித்திருந்த இந்த படம் தான் தாய்க்குப் பின் தாரம். இந்த படம் 1956 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் மூலம் சின்னப்ப தேவருக்கு மிகப்பெரிய லாபமும் கிடைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் டப் செய்ய நினைத்தார். பின் இதன் உரிமையை நாகி ரெட்டியார் வாங்கி இருந்தார். இந்த படமும் டப் செய்யப்பட்டு வெளியாகும் நேரத்தில் எம்ஜிஆர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

நட்பு பிரிய காரணம்:

அதில், என்னுடைய படத்தை என்னுடைய குரலை என்னிடம் கேட்காமல் எப்படி நீங்கள் டப் செய்யலாம் என்று சின்னப்ப தேவனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதை பார்த்து பதறிப்போன சின்னப்ப தேவர் நாகிரெட்டியாரிடம் இது குறித்து கூறியிருக்கிறார். உடனே அவர், நான் அதை பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னார். இதனால் எம்ஜிஆருக்கும் -சின்னப்ப தேவருக்கும் ஐந்து வருடங்களுக்கும் மேலாக எந்தவித தொடர்பும் இல்லாமல் போனது. அதற்குப்பின் இவர்களுடைய நட்பில் விரிசல் உண்டானது என்றே சொல்லலாம்.

Advertisement