ஆன் லைன் கிளாசுக்கு போன் இல்லாமல் கஷ்டப்பட மாணவி – ஐபோன் அனுப்பிய அஜித் பட நடிகை.

0
741
taapsee

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டு இருக்கிறார் நடிகை டாப்ஸி பன்னு. இவர் தமிழில் 2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் . அதனைத் தொடர்ந்து நடிகை டாப்சி அவர்கள் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது டாப்சி அவர்கள் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் தனுஷ், அஜித் ன்ற படங்களில் நடித்த டாப்ஸி தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் கலக்கிக் கொண்டு வருகிறார். மேலும், பாலிவுட்டில் லீட் ரோலில் நடித்து வரும் டாப்ஸி, தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை டாப்ஸி ஆன் லைன் கிளாசுக்காக போன் இல்லாமல் இருந்த மாணவி ஒருவருக்கு ஐபோனை வாங்கி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

கர்நாடகாவை சேர்ந்த மாணவி ஒருவர், 12 ஆம் வகுப்பில் 94 சதவீத மதிப்பெண்களை எடுத்துள்ளார். மேலும், அவரை படிக்க வைக்க அவரது தந்தை கடன் வாங்கியும், மனைவியின் நகைகளையும் விற்றுள்ளார். படிப்பில் ஆர்வம் கொண்ட அந்த மாணவிக்கு ஆன் லைன் கிளாசில் படிக்க சரியான போன் இல்லை என்று செய்திகள் வெளியானது. இதை பார்த்த நடிகை டாப்ஸி அந்த மாணவிக்கு கடந்த வெள்ளிக்கிழமை புதிய ஐ போன் ஒன்றை வாங்கி அனுப்பியுள்ளார்.

அதனை பெற்றுக்கொண்ட அந்த மாணவி, டாப்ஸிக்கு நன்றி தெரிவித்ததோடு, டாப்ஸியின் ஆசிர்வாதத்துடன் நான் நீட் தேர்விற்கு கடினமாக உழைப்பேன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் டாப்ஸியின் இந்த உதவியை பப்லிசிட்டி என்று ட்விட்டர் வாசி ஒருவர் கிண்டலடித்தார். அதற்கு பதில் அளித்த டாப்ஸி, ஆம், சார், நீங்களும் இதை முயற்சி செய்யுங்கள் ஆனால், நீங்களே இதை செய்யுங்கள் என்று தனது ஸ்டைலில் பதில் அளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement