கடந்த சில வருடங்களாக ஹிட் படங்கள் கொடுக்காததால் தமன்னா மீது அவரது ரசிகர் செருப்பை வீசியுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. ஹைதராபாத் நகரில் உள்ள நகைக்கடை ஒன்றை திறக்க சென்றிருந்தார் தமன்னா.
Shocking Moment : Stranger throws chappal on Actress #Tamanna @tamannaahspeaks at #MalabarGold Shop Opening Ceremony! #Tamannaah pic.twitter.com/UsulMruFPA
— Filmy Focus (@FilmyFocus) January 28, 2018
அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று செல்பி எடுத்துக்கொண்டிருந்த தமன்னா மீது கரிமுல்லா என்பவர் செருப்பை எடுத்த வீசியுள்ளார். பின்னர் யார் வீசியது என தேடியபோது கரிமுல்லா செருப்பு இல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரை கூட்டத்தில் இருந்து வெளியேற்றினர். ஏன் செருப்பு வீசினீர்கள் என கேட்டபோது, தமன்னா கடந்த சில வருடங்களாக படங்களில் நன்றாக நடிக்கவில்லை அதனால் தான் செருப்பை வீசியுள்ளேன் எனக் கூறியுள்ளார் கரிமுல்லா. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.