தனுஷ் படத்தில் நடித்ததால் இத்தனை ஆண்டு வாய்ப்பில்லாமல் இருந்துள்ள திரிஷா – அவரே சொல்லி புலம்பிய காரணம்.

0
959
trisha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார். பின் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், நடிகை திரிஷா அவர்கள் சமீப காலமாகவே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால், நயன்தாரா அளவிற்கு லீட் கதாபாத்திரங்கள் இவருக்கு கைகொடுக்கவில்லை. இருப்பினும் நயன்தாராவிற்கு இணையாக தமிழ் திரையுலகில் இன்றும் ஒரு அந்தஸ்துடன் இருந்து வருகிறார் திரிஷா.

- Advertisement -

கம் பேக் கொடுத்த 96 :

சமீபத்தில் தான் நடிகை திரிஷா தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். ஆனால், தற்போது அதே அழகுடன் ஜொலித்து வருகிறார். விஜய், அஜித், ரஜினி, கமல், விக்ரம், தனுஷ், சிம்பு என்று இன்றைய தலைமுறையின் திரிஷா நடித்து இருந்தாலும் சமீப வருடங்களாக திரிஷாவின் திரை வாழ்க்கை கொஞ்சம் சறுக்களில் தான் இருந்து வருகிறது. இறுதியாக இவர் நடித்த 96 திரைப்படம் தான் இவருக்கு ஒரு கம் பேக்கை கொடுத்தது என்றே சொல்லாமல்.

கொடி படம் குறித்து திரிஷா :

இப்படி ஒரு நிலையில் தற்போது திரிஷா தனது நண்பர்களிடம் அடிக்கடி ஒரு விஷயத்தை கூறி வருத்தப்படுகிறாராம். தனுஷ் நடித்த ‘கொடி’ படத்தில் வில்லியாக நடித்திருக்க கூடாது என்றும், அந்த படத்துக்கு பிறகு தனது சினிமா வாய்ப்புகள் குறைந்து போனதாக கவலை தெரிவித்து வருகிறார். ‘கொடி’ படத்தில் வில்லியாக நடித்ததால் தான் தனக்கு கதாநாயகி வாய்ப்புகள் வராமல் போய்விட்டது. அது மட்டுமல்லாமல் 2-வது கதாநாயகியாக நடிக்கவும் என்னை கேட்கிறார்கள், என்று ஆதங்கப்பட்டு கொள்கிறாராம்.

-விளம்பரம்-

படு தோல்வியடைந்த படம் :

நடிகர் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்த கொடி திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. துரை செந்தில்குமார் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. இருப்பினும் இந்த படத்தில் ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் வெள்ளையாக அசத்திய த்ரிஷாவிற்கு அந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதும் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த திரைப்படம் சரியாக ஓடாததால் த்ரிஷாவிற்கு இந்த படத்திற்கு பின்னர் தமிழில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வாய்ப்புகள் அமையவில்லை.

இரண்டு ஆண்டுகள் வாய்ப்பில்லாமல் இருந்த திரிஷா :

கொடி திரைப்படத்திற்கு பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து தான் இவர் நடித்த மோகினி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நடிகை திரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் இந்த திரைப்படமும் மாபெரும் தோல்வியை சந்தித்தது. இந்த படத்திற்கு பின்னரே தான் 96 திரைப்படம் இவருக்கு மீண்டும் ஒரு ரீ என்ட்ரி படமாக அமைந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திரிஷா மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் கொந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Advertisement