தென்னிந்திய சினிமா உலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து படங்களில் கதாநாயகியாக நடித்து வலம் வருபவர் நடிகை திரிஷா. அதோடு இத்தனை ஆண்டுகளாக எவ்வளவு புது புது நடிகைகள் வந்தாலும் சினிமா துறையில் தனக்கென இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை திரிஷா. திரிஷாவின் உண்மையான பெயர் ‘அனுராதா தேவி’. சினிமா உலகத்தில் ‘ திரிஷா’ என்று பெயர் மாற்றிக் கொண்டார். இவர் சாமி, கில்லி, திருப்பாச்சி போன்ற சூப்பர் ஹிட் படங்களின் மூலம் தான் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார். அது மட்டும் இல்லை இவர் நடிப்புக்கு வருவதற்கு முன் 1999 ஆம் ஆண்டு சென்னையின் அழகி என்ற பட்டத்தையும் தட்டிச் சென்றார்.
மேலும், ரஜினிகாந்த், அஜித், விஜய், விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லைங்க தற்போது கூட ரசிகர்களின் கனவு தேவதையாக விளங்கி வருகிறார். மேலும், இவரது நடிப்பில் வெளிவந்த’ 96′ படத்தின் மூலம் திரிஷா அவர்கள் மீண்டும் ரசிகர் பட்டாளத்தையே சேர்த்தார் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு 96 என்ற படத்தில் திரிஷா தன் நடிப்பின் மீண்டும் தன்னை நிரூபித்துள்ளார். அதையடுத்து தற்போது ‘பரமபதம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் வந்தது. மேலும், திரிஷாவின் பட வாய்ப்புகள் இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை என்று கூட கூறலாம். அது மட்டும் இல்லைங்க நம்ம திரிஷா அவர்கள் கதாநாயகிகளை மையமாகக் கொண்டு வரும் படங்களில் மட்டும் தான் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிறகுக்கு நடிகை த்ரிஷாவும் இந்த மாதிரி கதை களங்களில் இறங்கி விட்டார் என்று கூட சொல்லலாம்.
இதையும் பாருங்க : பள்ளி படிக்கும் போதே கில்லியாக இருந்த கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் சிறு வயது புகைப்படம்..
அது மட்டும் இல்லைங்க திரிஷா அவர்களுக்கு ரொம்ப நாள் கனவு நின்று பார்த்தால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நடிப்பது தான். அதுவும் ‘பேட்ட’ படத்தின் மூலம் நிறைவேறியது என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்த சினிமா உலகில் சில வருடங்கள் தாக்கு பிடிப்பது ரொம்ப கஷ்டமான விஷயம். ஆனால், திரிஷா அவர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்கு பிடித்து இருப்பது ரொம்ப பெரிய விஷயம் தாங்க. அந்த அளவிற்கு அவர் சினிமாத் துறையில் இருப்பதற்கு காரணம் அவருடைய பயங்கரமான கடின உழைப்பு,வீடா முயற்சி. மேலும், அவருடைய கடின உழைப்பினால் தான் இந்த அளவிற்கு புகழின் உச்சத்தில் இருக்கிறார். சமீபத்தில் திரிஷா அவர்கள் தனக்கு ரொம்ப பிடித்த உயர்ரக கார் “Mercedes-Benz C-Class Cabriolet C-300” என்ற பென்ஸ் காரை வாங்கியுள்ளார். மேலும், இந்த காரின் மதிப்பு இந்திய ரூபாயில் பார்த்தால் 65 ஆகும். அதோடு அவர் கார் வாங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் திரிஷாவிற்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து திரிஷா அவர்கள் தெலுங்கில் சிரஞ்சீவி யுடனும், மலையாளத்தில் மோகன்லாலுடன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலும் இணையங்களில் வெளிவந்துள்ளது. அது மட்டும் இல்லைங்க ‘பொன்னியின் செல்வன்’ என்ற படத்திலும் திரிஷா நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளிவந்ததும். ஆகவே ஒரே சமயத்தில் மூன்று மொழிகளிலும் திரிஷாவிற்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அதோடு மூன்று மொழிகளின் சூப்பர் ஸ்டாருடன் பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் கூறியுள்ளார்கள். திரிஷாவுக்கு கார் வாங்கிய சந்தோஷத்துடன்,மூன்று படம் வாய்ப்பு கிடைத்தது ஒரே “ஜாக்பாட்” தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.