டிக் டாக்கில் இணைந்த திரிஷா. அவர் வெளியிட்ட முதல் வீடீயோவை பாருங்க.

0
17054
Trisha
- Advertisement -

சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை விட தற்போது இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்திருப்பது டிக் டாக் செயலி தான். தற்போது ஆண், பெண், இளம் வயதினர், மூத்தவர்கள் என பல்வேறு தரப்பினர் மத்தியில் இந்த டிக் டாக் மிகவும் பிரபலம். இந்த டிக் டாக்கில்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமாகி வருகின்றன. டிக் டாக் மூலமாகவே பலர் பிரபலமாகி சினிமா மற்றும் சின்னத்திரைக்குள் நுழைந்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து விதமான படப்பிடிப்பு வேலைகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பிரபலங்கள் அனைவரும் வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக பல்வேறு வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். தற்போது இந்த டிக்டாக் செயலி தான் இந்தியா முழுவதும் மிக பிரபலமாக உள்ளது.

இதையும் பாருங்க : அரை ட்ராயாரில் ‘ஹவுஸ் ஓனர்’ பட நடிகை. இவங்க இந்த பிரபல நடிகையின் மகள் தான்.

- Advertisement -

அந்த அளவுக்கு இளைஞர்களை ஈர்த்து வரும் இந்த டிக் டாக் செயலியில் தற்போது பல்வேறு பிரபலங்களும் இணைய துவங்கியுள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த டிக் டாக்கில் நடிகை திரிஷாவும் இணைந்து உள்ளார். நடிகை திரிஷா டிக் டாக்கில் இணைந்து உள்ளதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியில் உள்ளார்கள். டிக்டாக்கில் நடிகை திரிஷா பதிவிட்ட முதல் வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.

I Don't Care": Non-Cooperation from The Actress Trisha

-விளம்பரம்-

இந்த வீடியோவில் நடிகை திரிஷா savage என்ற ஆங்கில பாடலுக்கு செம்ம ஸ்டைலாக நடனம் ஆடி உள்ளார். ஒரு டி-ஷர்ட், மினி ஷார்ட்ஸ் மற்றும் கலக்கலா ஒரு கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு, காதோரம் அழகான பூவையும் சூடிக்கொண்டு கவர்ச்சியாக ஆடிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

இதையும் பாருங்க : அந்த வசதி கூட இல்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார் – மாஸ்டர் பட பிரபலம் ட்வீட்.

தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் 1 நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை த்ரிஷாவுக்குபரமபதம், கர்ஜனை, ராங்கி, சுகர் என அடுத்தடுத்து பல படங்கள் வரிசையாகக் காத்திருக்கிறது.

Advertisement